ஐ.டி துறையின் இருண்ட பக்கங்களைக் காட்டும் வார்டு 126!

சோனியா அகர்வால் மற்றும் சாந்தினி தமிழரசன் நடிக்கும் ‘வார்டு 126’ திரைபடம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.பி டாக்கீஸ் தயாரிப்பில், செல்வகுமார் செல்லப்பாண்டியன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

படத்தில் முன்னணி நடிகர்களான மைக்கல் தங்கதுரை, ஜிஷ்ணு மேனன், ஷ்ரிதா சிவதாஸ், வித்யா பிரதீப் மற்றும் ஸ்ருதி ராமகிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திக்கு எஸ்.கே. சுரேஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, தியாகு படத்தொகுப்பை செய்துள்ளார். வருண் சுனில் இசையமைத்து உள்ளார்.

படத்தைப் பற்றி இயக்குனரிடம் வினவியபோது ”ஒவ்வொரு துறையிலும் ஒரு இருண்ட பக்கங்கள் இருக்கிறது.

அதேபோல் நான் ஐடி துறையில் பணியாற்றியபோது என் கண் முன்னரே நடந்த அதன் இருண்ட பக்கங்களின் நிகழ்வுகளை மையப்படுத்தி இந்த கதையை உருவாக்கியுள்ளேன் என்றும் இப்படம் ஒரு ரொமேன்டிக் இன்வெஸ்டிக்டிவ் திரில்லர் படம்’ என்றும் கூறினார்.

Comments (0)
Add Comment