காற்றினிலே வரும் கீதம்!

நினைவில் நிற்கும் வரிகள்:

****

காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்
கல்லுங் கனியும் கீதம்

பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொலி கொஞ்சிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
மதுர மோஹன கீதம் – நெஞ்சினிலே
நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி
நினை வழிக்கும் கீதம்

(காற்றினிலே)

சுனை வண்டுடன் சோலைக் குயிலும்
மனம் குவிந்திடவும்
வான வெளிதனில் தாரா கணங்கள்
தயங்கி நின்றிடவும்
ஆ யென் சொல்வேன்! மாயபிள்ளை
வேய்ங்குழல் பொழி கீதம்!!

(காற்றினிலே)

நிலா மலர்ந்த இரவினில் தென்றல்
உலாவிடும் நதியில்
நீலநிறத்து பாலகன் ஒருவன்
குழல் ஊதி நின்றான் – காலமெ(ல்)லாம்
காலமெ(ல்)லாம் அவன் காதலை எண்ணி
உருகுமோ என உள்ளம்.

(காற்றினிலே)

– எம்.எஸ்.சுப்புலட்சுமி நடிப்பில் 1945-ல் வெளிவந்த ‘மீரா’ படத்தில் இடம்பெற்ற இப்பாடலை எழுதியவர் கல்கி. இசை: எஸ்.வி.வெங்கட்ராமன். 

Comments (0)
Add Comment