கிரீஸில் உக்ரைன் விமானம் விழுந்து விபத்து!

உக்ரைன் விமான நிறுவனத்தால் இயக்கப்படும் அன்டோனோவ் சரக்கு விமானம் கிரீஸில் உள்ள கவாலா நகருக்கு அருகே விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்த 2 மணி நேரங்களுக்கு தீப்பிழம்புகளை பார்த்ததாகவும் வெடிச்சத்தம் கேட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

செர்பியாவில் இருந்து ஜோர்டானுக்கு சென்று கொண்டிருந்த An-12 விமானத்தின் எஞ்சின் ஒன்றில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக அவ்விமானத்தின் பைலட் கிரீஸின் சிவில் ஏவியேஷன் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

விமானத்தை அவசரமாக தரையிறக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்த அதிகாரிகள், தெசலோனிகி அல்லது கவாலா ஆகிய இரு விமான நிலையங்களில் ஏதேனும் ஒன்றின் விமானத்தை தரையிறக்க அனுமதி அளித்துள்ளனர்.

ஆனால் திடீரென விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதால் விமான நிலையத்திற்கு 40 கிலோமீட்டர் தொலைவில் விமானம் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது.

அந்த விமானத்தில் எட்டு பேர் இருந்ததாகவும், அத்துடன் 12 டன் ஆபத்தான வெடிபொருட்கள் இருந்ததாகவும், கூறப்படுகிறது.

Comments (0)
Add Comment