தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி மையங்களில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி, சென்னை எழும்பூர் குடும்பநல பயிற்சி நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியின்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான முதல் தவணை தடுப்பூசியை 95.27 சதவீதம் பேரும், 2-ம் தவணையை 87.35 சதவீதம் பேரும் போட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு மட்டும் யாரும் ஆர்வம் காட்டவில்லை.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை நன்றாக உள்ளது. இன்று அல்லது நாளை அவர் வீட்டுக்கு திரும்பிவிடுவார். இந்தியாவில் குரங்கம்மை வேகமாக பரவுவதால் பன்னாட்டு விமான நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனக் குறிப்பிட்டார்.

Comments (0)
Add Comment