பிரான்ஸின் தேசிய தின கொண்டாட்டத்தையொட்டி வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட ஈஃபிள் கோபுரம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
பிரான்ஸில் தேசிய தின கொண்டாட்டத்தை நிறைவு செய்யும் வகையில் தலைநகர் பாரிஸில் உள்ள ஈஃபிள் கோபுரம் வண்ண விளக்குகளால் ஒளிரச்செய்யப்பட்டதுடன், அதனை சுற்றி கண்கவர் வாணவேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டன.
அப்போது ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு தேசியக்கொடியின் நிறங்களிலும் ஈஃபிள் கோபுரம் ஒளிரச்செய்யப்பட்டது.
அதன் பின்னணியில் ஸ்டெஃபானியா பாடலின் மூலம் யூரோ விஷன் 2022 பாடல் போட்டியில் வெற்றிபெற்ற உக்ரைனை சேர்ந்த கலுஷ் இசைக்குழுவினரின் இசையும் ஒலித்தது. இதனை ஏராளமான பார்வையாளார்கள் கண்டுகளித்தனர்.