அமெரிக்க பத்திரிகையான டைம், உலகம் முழுவதும் உள்ள மிகச் சிறப்பான 50 இடங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஒன்றாகக் கேரளமும் இடம்பெற்றுள்ளது.
‘உலகின் சிறந்த இடங்கள்’ பட்டியலில் கேரளா, சுற்றுச்சூழல் சுற்றுலாத்தலமாக ஒன்பதாவது இடத்தைப் பெற்றிருப்பதில் மலையாள மக்கள் மகிழ்ந்துள்ளனர்.
“கண்களை ஈர்க்கும் அழகிய கடற்கரைகள், உப்பங்கழிகள், கோவில்கள்,
அரண்மனைகள் நிறைந்த கேரளா ‘கடவுளின் சொந்த நாடு’ என மக்களால் அழைக்கப்படுகிறது” என்று டைம் இதழ் குறிப்பிட்டுள்ளது.
கேரளாவின் முதல் கேரவன் பூங்காவான ‘காரவன் மெடோஸ்’ வாகமனில் திறக்கப்பட்டது என்றும் டைம் தெரிவித்துள்ளது.
அமீரகத்தின் ராஸ் அல் கைமா, அமெரிக்காவின் பார்க் சிட்டி,
கலாபகாஸ் தீவுகள், செக் குடியரசின் டோல்னி மொராவா, சியோல், கிரேட் பேரியர் ரீஃப், தோஹா மற்றும் டெட்ராய்ட் ஆகியவை டைம் பட்டியலில் சிறந்த இடங்களாக இடம்பெற்றுள்ளன.
பா. மகிழ்மதி