மாஸாக வெளியான சிவராஜ்குமாரின் ‘கோஸ்ட்’ பர்ஸ்ட் லுக்!

கன்னட சினிமாவின் மாஸ் ஹீரோ மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் தற்போது ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘GHOST’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக உருவாகி வருகிறது.

மற்ற மொழிகளில் உள்ள டாப் நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். பிளாக்பஸ்டர் ‘Birbal’ புகழ் ஸ்ரீனி இந்தப் படத்தை இயக்குகிறார்.

அரசியல்வாதியும் தயாரிப்பாளருமான சந்தேஷ் நாகராஜின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தினைத் தயாரித்துள்ளது.

ஆக்‌ஷன் ஹெய்ஸ்ட் த்ரில்லரான ‘GHOST’ மிகவும் சுவாரஸ்யமான ஜானரில் உருவாகி வருகிறது.

கன்னட சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ஹெய்ஸ்ட் படம் உருவாகிறது.

மேலும் இந்தப் படத்தின் க்ளைமாக்ஸை கேட்டு உடனடியாக இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் சிவராஜ்குமார்.

இந்தப் படம் இந்திய சினிமாவில் ஒரு தனித்துவமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. GHOST படம் அனைத்து வித ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 12ம் தேதியான இன்று டாக்டர் சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, பாட்ஷா கிச்சா சுதீப், சிவராஜ்குமாருக்கு வாழ்த்துகள் தெரிவித்து ‘GHOST’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.

படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் சுவாரஸ்யமாக இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கியைப் பிடித்திருக்கும் சிவராஜ்குமாரின் தீவிரமான தோற்றம் நிச்சயமாக அனைவரது கவனத்தை ஈர்க்கிறது மற்றும் காருடன் கலந்த ரிவால்வர் படத்தின் வகையைப் பற்றிய தெளிவான குறிக்கிறது.

சர்ச் லைட், பைக்கர்ஸ், கார்கள் போஸ்டர் முழுக்க குறியீடுகளும் அதிகமாக உள்ளது.

‘GHOST’ படக்குழுவில் தலை சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த படத்திற்கு மஸ்தி மற்றும் பிரசன்னா விஎம் இருவரும் வசனம் எழுதுகிறார்கள்.

தகரு மற்றும் சலகா போன்ற பிளாக்பஸ்டர் படங்களுக்கு மஸ்தி வசனம் எழுதியுள்ளார்.

அதேசமயம் பிரசன்னா ஸ்ரீனியின் ‘பீர்பால்’ படத்திற்கு வசனம் எழுதினார்.

இது கன்னடத் திரைப்படங்களில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற த்ரில்லர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

சமீபத்திய குடும்ப பொழுதுபோக்கு படமான ‘ஓல்ட் மாங்க்’ படத்திற்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் இறுதியில் தொடங்கவுள்ளது.

Comments (0)
Add Comment