மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் பருவமழை தொடங்கியது. இதில் கடந்த ஒரு வாரமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

குறிப்பாக கொங்கன் உள்ளிட்ட பகுதிகளில் வருகிற 13-ம் தேதி வரை மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.

இதையடுத்து மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இதேபோல ராய்காட், ரத்னகிரி, சத்தாரா, கோலாப்பூர் ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களில் மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மராட்டியத்தில் கடந்த 1-ம் தேதி முதல் கனமழைக்கு 76 பேர் பலியானது தெரியவந்துள்ளது. இதில் கடந்த சனிக்கிழமை மட்டும் 9 பேர் பலியானார்கள்.

இதில் வார்தா மாவட்டத்தில் 4 பேர், கட்சிரோலியில் 3 பேர், நான்தெட், சிந்துதுர்க்கில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதேபோல நூற்றுக்கணக்கான கால்நடைகளும் கனமழையில் சிக்கி உயிரிழந்துள்ளன.

Comments (0)
Add Comment