குறுக்கு வழியில் வாழ்வு தேடும் குருட்டு உலகம்!

நினைவில் நிற்கும் வரிகள்:

****

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா
இது கொள்ளையாடிப்பதில்
வல்லமை காட்டும் திருட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா


இருக்கும் அறிவை மடமை மூடிய
இருட்டு உலகமடா
வாழ்வில் எந்த நேரமும்
சண்டை ஓயாத முரட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா

விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம்
மனம் வெந்திடும் தோட்டக்காரனிடம்
மிரட்டல் வார்த்தைகளிலாடும்
பல வரட்டு கீதமும் பாடும்
வித விதமான பொய்களை வைத்தது
பிழைக்கும் உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா

அன்பு படர்ந்த கொம்பினிலே
ஒரு அகந்தை குரங்கு தாவும்
அதன் அழகை குலைக்க மேவும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும்
சிலர் குணமும் இதுபோல் குறுகிப் போகும்
கிறுக்கு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா

****

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிப்பில், சுந்தர் ராவ் நட்கர்னி இயக்கத்தில் 1957-ம் ஆண்டு வெளிவந்த ‘மகாதேவி‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். குரல் : ஜமுனா ராணி, இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி.

Comments (0)
Add Comment