விவசாயம் சார்ந்த நாடு இந்தியா!

– பிரதமர் மோடி

குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற இயற்கை விவசாயம் குறித்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார்.

மாநாட்டில் பேசிய பிரதமர், “நமது வாழ்க்கை, நமது சுகாதாரம், நமது சமுதாயத்தின் அடிப்படை எல்லாமே நமது விவசாய முறை தான். இயற்கையாகவும் கலாச்சார ரீதியாகவும் இந்தியா, விவசாயம் சார்ந்த நாடு.

நமது விவசாயிகள் முன்னேற்றமடைந்தால், விவசாயமும் முன்னேறி, செழிப்புறும், அதன் மூலம் நாடும் முன்னேறும். இயற்கை விவசாயத்தை மேற்கொண்டால், பூமித் தாய்க்கு சேவையாற்றலாம். மண்ணின் வளத்தைப் பாதுகாக்கலாம், அதன் உற்பத்தித் திறனை மேம்படுத்தலாம்.

இயற்கை விவசாயப் பாதையில் மேலும் முன்னோக்கிச் செல்லவும், புதிதாக உருவாகும் உலகளாவிய வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும் இதுவே சரியான தருணம்.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம், பாரம்பரிய விவசாயத்திற்குத் தேவையான வளம் மற்றும் பயிற்சியை அளிக்கிறது” எனக் கூறினார்.

Comments (0)
Add Comment