வாழத்தகுதியுடைய நகரங்களின் பட்டியலில் சென்னை 5-வது இடம்!

எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு உலகின் வாழக்கூடிய சிறந்த நகரங்களின் வருடாந்திர தரவரிசையை வெளியிட்டுள்ளது.

உள்கட்டமைப்பு, பசுமை திறந்த வெளி, அரசியல் ஸ்திரத்தன்மை, குற்ற விகிதங்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் 173 நகரங்களை  இந்த அமைப்பு வரிசைப்படுத்தியுள்ளது.

அதன்படி 2022 ஆம் ஆண்டின், உலகளவில் வாழத்தகுதியுடைய முதல் 10 சிறந்த நகரங்களின் பட்டியலில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.

இந்த ஆண்டு இந்திய நகரங்கள் மிகவும் மோசமாக இடத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளன.

முக்கியமாக பெங்களூரு 146 வது இடத்தைப் பிடித்து இந்தியாவிலேயே வாழத்தகுந்த சிறந்த நகரத்தின் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

டெல்லி 112-வது இடத்திலும், மும்பை 117வது இடத்திலும் உள்ளது. அகமதாபாத் 143 வது இடத்திலும் சென்னை நகரம் 142 வது இடத்திலும் உள்ளது.

Comments (0)
Add Comment