தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது இடங்களில், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மாநகரப் பேருந்திகளில் முகக்கவசம் அணிந்து பணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும்போதும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.