26 லட்சம் பார்வையாளர்களைக் கடந்த ‘தாய்’ இதழ்!

கடந்த மூன்றாண்டுகளுக்கு மேல் தமிழ் ஊடக வெளியில் தனக்கென்று தனித்த அடையாளத்தை உருவாக்கவும், உலகளாவிய அளவில் பரந்துபட்ட மக்களை தொடர்ந்து சென்றடையவும் முயற்சித்து வந்திருக்கிறது எங்களது ‘தாய்’ இணைய இதழ்.

எதிர்பார்த்தபடியே மாதம் ஒன்றுக்கு 26 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் தாய் இணைய இதழ் மற்றும் தாய் முகநூல் பக்கத்திலும் வந்து வாசிக்கிறார்கள் என்பதை தெரியப்படுத்தி இருக்கிறது முகநூல் நிறுவனம்.

ஏறத்தாழ 26,55,237 பார்வையாளர்கள் வந்து எங்களது முகநூல் பக்கத்திற்கு வருகை தந்திருப்பது மகிழ்ச்சியூட்டுகிறது.

அனைவரையும் வாழ்த்தத் தோன்றுகிறது.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் அதன் வாசிப்புத் தளம் விரிந்திருக்கிறது.

பார்வையாளர்களும் விரிந்திருக்கிறார்கள்.

 திரைப்படம், அரசியல், சமூகம், இலக்கியம், வணிகம், விளையாட்டு என்று பலதரப்பட்ட அம்சங்களைத் தாங்கி வந்துகொண்டிருக்கிற ‘தாய்’ இணைய இதழ் நேற்றைய அபூர்வமான நிழல்களையும் கருப்பு வெள்ளைப் புகைப்படங்களாக முன்வைக்கிறது.

அந்தக் காலத்திய திரைப்படங்கள் குறித்த செய்திகளை முன்வைக்கிறது. நமது திரைக்கலைஞர்களைப் பற்றிய அபூர்வமான செய்திகளை பார்வைக்கு வைக்கிறது.

இன்றைக்கு திரைக்கு வரும் சமகால திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்களையும் முன்வைக்கிறது.

எளிய மக்களுக்கான பார்வையுடன் சமகால அரசியலை முன்வைக்கிறது. முரண் இல்லாமல் சமூகப் பிரச்சனைகளைத் தொட்டுக் காட்டுகிறது.

இலக்கிய வாசிப்பின் ரசனையையும் சுட்டிக் காட்டுகிறது. பெண்மையைப் போற்றுகிறது.

பலதரப்பட்ட வயது சார்ந்தவர்களும் தாய் முகநூல் தளத்திற்குள் விருப்பத்துடன் நுழைந்து வாசிக்கும் மனநிலையை உருவாக்கியிருக்கிறது.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றிய அரிய செய்திகளை அபூர்வ புகைப்படங்களுடன் இடம்பெறச் செய்கிறது.

இன்னும் இப்படி தாய் முகநூலில் பலதரப்பட்ட வாசகர்கள் அவரவர் விருப்பம் சார்ந்து உள்ளே நுழைவதற்கு ஈர்ப்பு மிக்க எளிய வழிகள் உள்ளன.

எங்களையும் தாய் இணையதளம் மற்றும் முகநூல் பக்கத்தையும் இந்த அளவிற்கு உயர்த்தியிருக்கிற பார்வையாளர்கள், எழுத்தாள நண்பர்கள், தொழில்நுட்பம் சார்ந்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இனிய வாழ்த்துகள்!

Comments (0)
Add Comment