ஃபேஸ்புக் எதற்குப் பயன்படுகிறது?

சமீப நாட்களாக ஃபேஸ்புக்கில் பிரபலங்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்களைப் பற்றிய குறிப்புகளை கந்தசாமி.ஆர் என்பவர் எழுதிவருகிறார்.

தற்போது முகநூல் எதற்குப் பயன்படுகிறது என்று 60 காரணங்களை வரிசைப்படுத்தியுள்ளார்.

அவற்றை தாய் இணையதள வாசகர்களுக்காக வழங்குகிறோம்..

1.சிலருக்குக் கவிதைகள் பதிவிட
2. சிலருக்கு வாழ்வில் கண்ட அனுபவங்களைப் பதிவிட
3. சிலருக்குத் தங்களைப் பற்றிப் பதிவிட
4. சிலருக்குச் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள
5. சிலருக்கு வாசிப்பு தளமாக
6. சிலருக்கு அரசியல் கருத்துக்களைப் பதிவிட
7. சிலருக்குத் தங்கள் புகைப்படங்களைப் பதிவிட
8. சிலருக்கு வணக்கம் சொல்ல
9. சிலருக்கு வாழ்த்துகள் சொல்ல
10. சிலருக்கு கட்டுரைகள் எழுத
11. சிலருக்கு சிறுகதைகளைப் பதிவிட
12. சிலருக்கு புகழ் பெற்ற மனிதர்களின் அறிமுக தளமாக
13. சிலருக்கு நகைச்சுவைப் பதிவுகள் பதிவிட
14. சிலருக்கு புத்தகங்கள் விமர்சனம் எழுத
15. சிலருக்குத் தங்கள் புத்தகங்களை அறிமுகம் செய்ய
16. சிலருக்கு பிரபல்யமான நபர்களுடன் புகைப்படம் எடுத்து பதிவிட
17. சிலருக்கு ஓவியம் பதிவிட
18. சிலருக்குச் சிற்பங்கள், சிலைகள் பற்றி பதிவிட
19. சிலருக்கு கோவில்களின் வரலாறு பற்றிப் பதிவிட
20. சிலருக்கு தான் செய்த சமையலைப் பற்றிப் பதிவிட
21. சிலருக்கு அவர்களது யூட்யூப் சேனலை விளம்பரம் செய்ய
22. சிலருக்குப் பொழுது போக
23. சிலருக்குத் தாங்கள் பார்த்த திரைப்படங்களை விமர்சனம் செய்ய
24. சிலருக்குத் தங்கள் மதத்தின் பெருமை பேச
25. சிலருக்குத் தமிழின் தொன்மை, தமிழரின் பண்டைய நாகரீகம் பற்றிப் பதிவிட
26. சிலருக்கு முகநூல் குழுமங்கள் நடத்த
29. சிலருக்கு முகநூல் குழுமங்களில் பெற்ற வெற்றிச் சான்றிதழ்களைப் பதிவிட
30. சிலருக்குத் தாங்கள் பெற்ற பட்டங்கள், விருதுகள் பற்றிப் பதிவிட
31. சிலருக்குத் தங்கள் படைப்புகள் இன்ன பத்திரிக்கையில் வந்துள்ளது எனத் தெரியப்படுத்த
32. சிலருக்குக் தங்களுக்குப் பிடித்த வீடியோப்பதிவுகளைப் பதிவிட
33. சிலருக்கு அழகிய இயற்கைக் காட்சிகளைப் புகைப்படம் எடுத்துப் பதிவிட
34. சிலருக்கு பதிவில் உள்ள குறைகளைக் கண்டு பிடித்து அவர்கள் அறிவை வெளிப்படுத்த
35. சிலருக்குப் பதிவுகளில் கேள்விகள் கேட்டு புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்த
36. சிலருக்குத் தற்பெருமை பேச
37. சிலருக்கு நண்பர்களை அறிமுகம் செய்ய
38. சிலருக்கு அவர்கள் நடத்தும் பத்திரிகைகள் பற்றிப் பதிவிட
39. சிலருக்குத் தங்கள் பதிப்பகம் வெளியிடும் புத்கங்கள் பற்றிப் பதிவிட
40. சிலருக்கு இரங்கல் செய்தி பதிவிட
41. சிலருக்குத் தங்கள் தயாரிப்புகளை விற்பனைக்காக விளம்பரம் செய்ய
42. சிலருக்கு தாங்கள் பகுத்தறிவுவாதி என்று காட்டிக் கொள்ள
43. சிலருக்குத் தாங்கள் சிறந்த ஆன்மீகவாதி என்று காட்டிக் கொள்ள
44. சிலருக்குத் தங்களுக்குப் பிடித்த தலைவர்கள் புகழ் பாட
45. சிலருக்குத் தங்களுக்குப் பிடிக்காத எழுத்தாளர்கள், கவிஞர்களை வசை பாட
46. சிலருக்குத் தாங்கள் பேசும் மேடைப் பேச்சுக்களைப் பதிவிட
47. சிலருக்குத் தாங்கள் செய்யும் சமூக சேவை பற்றிப் பதிவிட

கந்தசாமி.ஆர்

48. சிலருக்குத் தங்கள் புகழ் பெற்ற தாத்தாக்கள், பாட்டிகள், அப்பா, அம்மா அவர்களைப் பற்றிப் பதிவிட
49. சிலருக்குத் தாங்கள் கொடுத்த அல்லது எடுத்த காணொளிப் பேட்டிகளைப்
பதிவிட
50. சிலருக்குத் தாங்கள் சிறந்த பாடகர் என்று காட்டிக் கொள்ள
52. சிலருக்குத் தாங்கள் படித்ததைப் பகிர்ந்து கொள்ள
53. சிலருக்குத் தங்களிடம் இருக்கும் நூல்கள் அல்லது படித்த நூல்கள் பற்றிப் பதிவிட
54. சிலருக்கு இறந்த புகழ்பெற்ற தலைவர்களை வசைபாட
55. சிலருக்கு தங்களின் அன்றாட நிகழ்ச்சிகளைப் பதிவிட
56. சிலருக்குத் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள
57. சிலருக்கு அரசு இதைச் செய்ய வேண்டும் என்று பதிவிட
58. சிலருக்கு அழகான பெண்களின் புகைப்படங்களைத் தேடித் தேடி தங்கள் பதிவுகளில் பதிவிட
59. சிலருக்குத் தங்கள் வாழ்க்கைத் தொடரைப் பதிவிட
60. சிலருக்குத் தங்கள் உள்ளக் குமுறல்களைப் பதிவிட

இதுபோல இன்னும் எத்தனையோ வகையாக முகநூல் பயன்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார் கந்தசாமி.

Comments (0)
Add Comment