ஆளில்லா போர் விமானம் வெற்றிகரமாக பரிசோதனை!

ஒன்றிய பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தானியங்கி முறையில் பறக்கும் தொழில்நுட்ப செயல் விளக்க விமானத்தை இன்று பரிசோதனை செய்துள்ளது.

இந்த விமானத்தில் பயன்படுத்தப்பட்ட அனைத்து வான் கட்டுப்பாட்டு சாதனங்களும் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை.

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள வான்சோதனை தளத்தில் முதல்முறையாக நடைபெற்ற இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்தது.

முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கக்கூடிய இந்த விமானத்தின், புறப்பாடு, பறக்கும் வழி, தரையிறங்குதல் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் துல்லியமாக நடைபெற்றன.

வருங்காலத்தில் தயாரிக்கப்படும் ஆளில்லா விமானங்களில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் இந்த சோதனை ஓட்டம் மாபெரும் சாதனையாக அமைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் இந்தியா தற்சார்பு அடைந்துள்ளதற்கு இது உதாரணமாக உள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Comments (0)
Add Comment