ஜூலை-1, 1961 – அமெரிக்க நாசாவின் விண்வெளி வீராங்கனை, இந்திய மங்கை கல்பனா சாவ்லா பிறந்த தினம் இன்று.
இந்தியாவிலுள்ள ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில், பனாரஸ் லால் சாவ்லாவுக்கும், சன்யோகிதா தேவிக்கும் மகளாக பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார்.
1982-ல் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து விமானப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், 1984-ல் அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் விண்வெளிப் விண்வெளிப் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவில் சேர்ந்தார். அங்கு கம்ப்யுடேஷனல் ஃப்ளுயட் டைனமிக்ஸ் மற்றும் வெர்டிகல் மற்றும் ஷார்ட் டேக் ஆஃப் அன்ட் லாண்டிக் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.
அடுத்த ஆண்டே அவரின் விண்வெளி வீரர் கனவு நனவாகத் தொடங்கியது. நாஸாவில் விண்வெளி வீரர் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பத்திருந்த சுமார் 3,000 பேரில், ஆறு பேர் மட்டுமே தேர்வானார்கள். அவர்களுள் கல்பனாவும் ஒருவர்.
கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ்-87 பயணம் செய்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1997-ல் இவரையும் சேர்த்து ஆறு வீரர்கள் கொண்ட குழு ஃப்ளோரிடாவில் கேப் கெனவரல் முனையிலிருந்து விண்ணுக்குச் செலுத்தப்பட்டது.
விண்வெளியில் 16 நாட்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு 252 தடவை பூமியைச் சுற்றியது இந்த விண்கலம். இதன்மூலம் விண்வெளிக்குச் சென்று வந்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.