மாணவர்களுக்காக உருவான ‘அற்றைத் திங்கள் அந்நிலவில்’!

நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட திரைப்படத்துறைக்கான பல பயிற்சிகளை அளிக்கும் பல பயிற்சி மையங்கள் கோடம்பாக்கத்தில் தோன்றி மறைந்து போயிருக்கின்றன.

தமிழ்த் திரைப்பட உலகிற்குப் பல தொழில்நுட்ப கலைஞர்களையும், நடிகர்களையும் உருவாக்கிக்கொடுக்கும் ஒரு மையமாகத் திகழ்கிறது ‘டிஸிஃப்மா – டீசேல்ஸ் சர்வதேச பிலிம் அகாடமி’.

இந்த பயிற்சி மையத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், இங்கு பயிற்சிபெறும் மாணவர்களுக்காக ஆண்டுக்கு ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.

அப்படத்தில் மாணவர்களை பணியாற்றவைத்து, நேரடி களப் பயிற்சி வழங்குகிறார்கள்.

அந்த வகையில், தயாரிக்கப்பட்ட படம் ‘அற்றைத் திங்கள் அந்நிலவில்’ முழுக்க முழுக்க புதுமுக நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

இது இதயத்தை வருடும் இனிய காதல் கதையாக உருவாகியுள்ளது.

ஐ.டி. நிறுவனத்தில் புதிதாக இணையும் ஹீரோயினுக்கு, அங்கு மேலாண்மை இயக்குநராக  இருக்கும் ஹீரோ மேல் காதல் ஏற்படுகிறது.

அந்த காதல் தீவிரம் அடையும்போது ஹீரோவுக்கு ஏற்கனவே திருமணமான தகவலோடு, அவர் திருமணம் செய்திருப்பதே ஹீரோயினின் அக்காவைத்தான் என்ற விஷயமும் சொல்லப்படுகிறது.

கடைசியில் ஹீரோயினின் காதல் என்ன ஆனது? என்பதை சொல்வதுதான் கதை.

ஹீரோவாக நவீன் குமார் என்ற அறிமுக நடிகர் நடித்திருக்கிறார். ஹீரோயினாக லாவண்யா. கதை, திரைக்கதை, வசனம் எழுதி எஸ். எஸ். ஜெயக்குமார் லாரன்ஸ் இயக்கியிருக்கிறார்.

பாபி என்ற அறிமுக இசையமைப்பாளர் இசையமைத்துள்ள இப்படத்தில் மூன்று  பாடல்கள் இடம்பெற்றுள்ளன. மூன்று பாடலும் திரும்பத் திரும்ப கேட்கும் காதல் மெலோடி பாடல்களாக உருவாகியுள்ளன.

பாடல்கள் வெளியான பிறகு நிச்சயம் இளைஞர்களின் செல்போனில் ரிங்டோனாவது உறுதியாம்.

படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து பின்னணி வேலைகளில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ‘அற்றைத் திங்கள் அந்நிலவில்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இந்த அகாடமியில் பயிலும் மாணவர்களின் நேரடி கள பயிற்சிக்காக ஆண்டுக்கு ஒரு திரைப்படம் தயாரிக்க முடிவு செய்திருக்கும் இயக்குநர் ஜெயக்குமார் லாரன்ஸ் பாராட்டுக்குரியவர்.

இப்படத்தில் உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள், உதவி படத்தொகுப்பாளர்கள் என்று பல்வேறு கிராப்ட்களிலும் மாணவர்கள் பணிபுரிந்து தங்களது திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பா. மகிழ்மதி

Comments (0)
Add Comment