வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் சுமார் 1000 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக வேலூர் நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் தெருக்களுக்கு தொடர்ந்து சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நேற்றிரவு திடீரென சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இரவு நேரம் என்பதால் யுவராஜ் என்பவர் அவரது கடையின் முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார்.
சாலை அமைக்கும் பணியின் போது அவரது இருசக்கர வாகனத்தையும் வைத்து அதன் மீது சிமெண்ட் சாலை போட்டுள்ளனர். இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்தாமலும் முன்னறிவிப்பு இன்றியும் சாலை போட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனிடையே காண்ட்ராக்டரின் இந்த செயலை விமர்சிக்கும் வகையில், காண்ட்ராக்டரின் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா என்ற வாசகம் ட்ரெண்டாகியுள்ளது.