ஆன்லைன் ரம்மி விளையாட்டு: தேவை உடனடிச் சட்டம்!

தொழில்நுட்ப ரீதியில் ஏமாற்றப்படுவது அண்மை காலங்களில் அதிகரித்து இருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று ஆன்லைன் ரம்மி.

இந்த ஆன்லைனில் அடுத்தடுத்து பெரும்பணத்தை செலுத்தி இழந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கடன் பெற்று மேலும் கடனாளியாகி அந்தக் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டவர்களும் இருக்கிறார்கள்.

இப்படி அண்மையில் அநேக உயிரிழப்புகள் இந்த ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்டிருக்கின்றன.

இதையொட்டியே இந்த ஆன்லைன் ரம்மி குறித்து முடிவெடுக்க கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழு தற்போது அதன் அறிக்கையை சமர்ப்பிக்கத்திருக்கிறது. அந்த அறிக்கையை ஒட்டின விவாதம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்திருக்கிறது.

முதல்வர் தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்தில் பல்வேறு அதிகாரிகள் உட்பட  பல்வேறு அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி குறித்த அவசர சட்டம் கொண்டுவர கொண்டு வருவதற்கான ஒரு முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த முடிவு பரவலாக வரவேற்கப்படக் கூடிய வரையறுக்கப்பட வேண்டிய ஒரு அவசர சட்டம் என்றே சொல்லலாம்.

ஏனென்றால் சமீபத்தில் அவ்வளவு பேர் பலியாகி இருக்கிறார்கள். ஏராளமானோர் இந்த ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து ஒரு வெறுமையை சந்தித்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் இந்த அவசர சட்டத்தை நிறைவேற்றக் கோரி பா.ம.க. வெளியிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி இருக்கின்றன.

முன்பு ஜெயலலிதா ஆட்சி பொறுப்பிற்றிருந்தபோது லாட்டரி சீட்டை ஒழிக்க எப்படி சட்டம் கொண்டு வந்தார்களோ? அதே மாதிரி தொழில்நுட்ப ரீதியாக பலரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது சட்ட ரீதியாக அவசியமான ஒன்று.

அதை உடனே செய்ய வேண்டும் என்று தான் பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கிறார்கள். திமுக அரசு இந்த அவசரச் சட்டத்தை உடனே பிறப்பிக்கட்டும்.

-யூகி

Comments (0)
Add Comment