– எஸ்.எஸ்.ராஜேந்திரன்
“1967 ஆம் ஆண்டு.
எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட சமயம். ராயப்பேட்டை மருத்துவமனையில் எம்.ஜி.ஆரும், எம்.ஆர்.ராதாவும் அனுமதிக்கப்பட்டிருந்த நேரம்.
பல தடைகளை மீறி உள்ளே நுழைந்து சிகிச்சையிலிருந்த எம்.ஜி.ஆரைப் பார்த்த போது, அந்த நிலையிலும் அவர் என்னிடம் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா?
“என்னையே பார்த்துக்கிட்டிருக்கே.. போ.. போய் ராதா அண்ணனைப் பாரு” என்றார்.
உடனே ராதாவைப் பார்க்கப் போனேன்.
“என்னண்ணே… இப்படிப் பண்ணீட்டீங்க?” என்று நான் கேட்டதும்,
“எம்.ஜி.ஆர் நல்லாயிருக்காரா?” என்று கேட்டார் ராதா.
“நான் நல்லாயிருக்கேன்.. அவரைப் போயிக் கவனிங்கடா..” என்று தொடர்ந்து சொன்னார் ராதா.
பிறகு இருவரையும் இன்னொரு அரசுப் பொதுமருத்துமனைக்குக் கொண்டு சென்றார்கள்”
– ‘லட்சிய நடிகர்’ என்றழைக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் 2007-ல் கொடுத்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி.