பிரபல குணச்சித்திர நடிகர் பீலி சிவம், தனது இனிய நண்பர் கவுண்டமணி பற்றி ஒரு முறை அளித்த பேட்டி:
“நாங்கள் இருவரும் சிறு வயதில் நாடகங்களில் நடித்து வந்த காலம் அது. கவுண்டமணி என் உயிர் நண்பன். ஒரு நாள் இரவு, வீதியில் நடந்து கொண்டு இருந்தோம். இருவரும் அன்று சாப்பிடவில்லை. எனக்கு கடும் பசியாக உள்ளதென அவனிடம் கூறினேன். இருவரிடமும் பணம் இல்லை.
கவுண்டமணி என்னிடம் “சிறிது நேரம் பொறுத்திரு. இதோ வருகிறேன்” என்று சொல்லிவிட்டு சென்றான். ஒரு சில மணி நேரம் கழித்து கையில் பரோட்டா பொட்டலத்துடன் வந்தான். அதை என் கையில் தந்து விட்டு சாப்பிட சொன்னான்.
“உன்னிடம் தான் பணம் இல்லையே? எப்படி வாங்கினாய்?” என்று கேட்டேன். அவன் பதில் சொல்லவில்லை.
நான் தொடர்ந்து வற்புறுத்தி கேட்டதும் அவன் சொன்ன பதில் “அருகில் உள்ள
ரத்த வங்கிக்கு சென்று என் ரத்தத்தை தானம் செய்து கிடைத்த பணத்தில் வாங்கினேன்” என்றான்.
என் கண்கள் கலங்கி விட்டன. நண்பன் பசிக்காக தன் ரத்தத்தை விற்று உணவு தந்த
அவனை என் வாழ்நாளில் எப்படி மறப்பேன்”.
நட்புக்கு உதாரணமாய் திகழும் தலைவர் கவுண்டமணி அவர்கள் வாழ்க பல்லாண்டு!
- நன்றி: முகநூல் பதிவு.