நல்ல விஷயங்களில் மட்டும் மனதை செலுத்துங்கள்!

இன்றைய நச்:

உண்மையாக நடந்து வரும் மனிதருக்கு எந்த ஒரு உபதேசமும் வேண்டியதில்லை.

நாம் செய்யும் எந்தக் காரியமும் நல்ல செயலாகவே இருக்க வேண்டும்.

நம்மை பற்றி நாமே பெருமைப்படுவதில் அர்த்தமில்லை; நாம் செய்யும் செயல்களால் பிறர் நம்மை மதிக்க வேண்டும்.

ஒருவன் படிக்கும் நூல்களைக் கொண்டே அவன் அறிவை எடைபோட வேண்டும்.

பொறுமை, சகிப்புத்தன்மை இந்த இரண்டை மிஞ்சிய நற்குணங்கள் வேறில்லை.

கவனமுடன் செயலாற்றுங்கள்; நல்ல விஷயங்களில் மட்டும் மனதை திருப்புங்கள்!

– மகாவீரர்

Comments (0)
Add Comment