சாய் பல்லவி படத்தில் இணைந்த சூர்யா – ஜோதிகா!

தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் சாய்பல்லவி. நடிப்பு, நடனம் என ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவி, அதையடுத்து வரிசையாக முன்னணி இயக்குனர்கள், நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது சாய்பல்லவி நடிப்பில் ’கார்கி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

சாய் பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் தலைப்பு போஸ்டரை வெளியிட்டனர். இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது.

மேலும், சாய் பல்லவி கார்கி படத்தின் முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என்று பகிர்ந்திருந்தார். ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்தனர்.

இந்த காத்திருப்புக்கு பதிலளிக்கும் விதமாக சூர்யா – ஜோதிகாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் படத்தை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளனர்

இது குறித்துப் பேசிய படக்குழுவினர், “வாழ்க்கையின் அதிசய நிகழ்வுகள் பல நேரங்களில் நாம் எதிர்பாராத போதே நடந்துவிடுகின்றன. அப்படி எங்களுக்கு நடந்த அதிசயம்தான் சூர்யா, ஜோதிகா எங்கள் படத்தில் இணைந்துள்ளது.

இருவரும் கார்கியை பார்வையாளர்களுக்கு கொண்டுசெல்வதைவிட எங்களுக்கு பெருமகிழ்ச்சி ஏதுமில்லை” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Comments (0)
Add Comment