மெட்ரிக்குலேஷன் பள்ளிகளிலும் இடஒதுக்கீடு கட்டாயம்!

– பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பொதுப்பிரிவில் 31 சதவீதம், எஸ்டி 1 சதவீதம், எஸ்சி 18 சதவீதம், எம்பிசி 20 சதவீதம், பிசிஎம் 3.5 சதவீதம், பிசி 26.5 சதவீதம் இடஒதுக்கீட்டை பின்பற்ற அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது.

மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பொதுப்பிரிவினருக்கு 31 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கான பட்டியல் தயாரிக்க வேண்டும் என்றும், அனைத்துப் பிரிவினருக்கும் ஏற்ற வகையில் பாகுபாடின்றி பட்டியல் தயாரிக்கவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடக்கிறதா என்பதை முதன்மைக்கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்தவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment