– திரவுபதி முர்மு கடந்து வந்த பாதை:
பாஜக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் திரவுபதி முர்மு. குடியரசுத் தலைவராக அவர் தேர்ந்து எடுக்கப்படுவது உறுதி
வேட்பாளராக அவர் தேர்வானது எப்படி?
மொத்தம் 20 பேர் பாஜக வேட்பாளர் பட்டியலில் இருந்தனர். முர்முவை வேட்பாளராக டிக் செய்தவர் – பிரதமர் மோடி.
முர்முவுக்கு வயது 64.
ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டம் பைடோபோசி கிராமத்தில் 1958-ம் ஆண்டு பிறந்தவர் முர்மு.
பட்டப்படிப்பு படித்துவிட்டு கொஞ்ச காலம் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்தார்.
அதனை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் சேர்ந்தார்.
அவர் வகித்த முதல் பதவி – கவுன்சிலர்.
19.97 ஆம் ஆண்டு ராய்ரங்பூர் நகர் பஞ்சாயத்து கவுன்சிலராக தேர்வானார்.
இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
2002 முதல் 2004 வரை ஒடிசாவில் அமைச்சராக பணியாற்றினார்.
2015 ஆம் ஆண்டு ஜார்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
அந்த மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர்.
இப்போது பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர்.
குடியரசுத் தலைவராக தேர்வாகப்போகும்முதல் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்.
இன்னொரு பெருமை – குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரிக்கப்போகும் இரண்டாவது பெண்.
இதற்கு முன் பிரதீபா பாட்டில் குடியரசுத் தலைவராக இருந்துள்ளார்.
துயர வாழ்க்கை:
பொது வாழ்க்கையில் படிப்படியாக உயரங்களைத் தொட்டாலும், திரவுபதி முர்முவின் தனிப்பட்ட வாழ்க்கை சோகம் நிறைந்தது.
இரண்டு மகன்கள். இருவரும் இறந்து விட்டனர். கணவரும் இப்போது உயிருடன் இல்லை. ஒரே மகள் இருக்கிறார்.
வெற்றி வாய்ப்பு எப்படி?
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், முர்முவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார் அந்த மாநில முதல்வரும், பிஜு ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும், ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகனும், முர்முவை ஆதரிப்பார் எனத் தெரிகிறது.
இருவரும் பாஜக கூட்டணியிலும், காங்கிரஸ் கூட்டணியிலும் இல்லாதவர்கள். எனவே, திரவுபதி முர்மு குடியரசுத் தலைவராக தேர்வாவது உறுதி.
கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலிலேயே, முர்முவின் பெயர், பாஜக வேட்பாளர் லிஸ்டில் இருந்தது. ஆனால் ராம்நாத் கோவிந்துக்கு அதிர்ஷ்டம் அடித்தது. இப்போது நேரம் கணிந்துள்ளது.
-பி.எம்.எம்.