அகதிகளுக்காக நோபல் பரிசை விற்ற பத்திரிகையாளர்!

  • உக்ரேனிய அகதிக் குழந்தைகளுக்கு உதவி

உக்ரேனிய குழந்தை அகதிகளுக்குப் பணம் திரட்டுவதற்காக ரஷ்யப் பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவ், அமைதிக்கான நோபல் பரிசுக்கான தங்கப் பதக்கத்தை ஏலம் விட்டார். அது 103.5 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டது.

நோபல் பரிசின் பழைய சாதனையை அது தகர்த்தது. 2014-ம் ஆண்டில் நோபல் பரிசு பதக்கத்திற்காக அதிகம் செலுத்தப்பட்ட தொகை 4.76 மில்லியன் டாலராகும். டிஎன்ஏ அமைப்பைக் கண்டுபிடித்ததன் மூலம் 1962-ல் ஜேம்ஸ் வாட்சனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஹெரிடேஜ் நிறுவனத்தால் நடத்தப்படும் ஏலத்தில் வாட்சனுடன் இணைந்து பரிசு பெற்ற பிரான்சிஸ் கிரிக்கின் குடும்பம் 2.27 மில்லியன் டாலரைப் பெற்றது.

முரடோவின் பதக்கம் 103.5 மில்லியன் டாலருக்கு விற்பனையானது. அதில் 100 மில்லியன் டாலர் நிதி சுவிஸ் பிராங்குகளாக கொடுக்கப்பட்டதால், ஏலம் எடுத்தவர் வெளிநாட்டுக்காரர் என்றும் தெரியவருகிறது.

“பெரிய அளவிலான ஆதரவு இருக்கும் என நம்பினேன். ஆனால் இது இவ்வளவு பெரிய தொகையாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை” என்கிறார் ஏலம் முடிந்த மகிழ்வில் முரடோவ்.

சுதந்திர ரஷ்யச் செய்தித்தாளான நோவாயா கெஸெட்டாவை உருவாக்கினார் முரடோவ். மேலும் ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து கிரெம்ளின் பத்திரிகையாளர்கள் மீதான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அப்போது பொது எதிர்ப்பிற்கு மத்தியில் பத்திரிகை அலுவலகம் மூடப்பட்டது.

உக்ரைனில் நடந்த போரினால் இடம்பெயர்ந்த குழந்தைகளுக்கு உதவ யுனிசெஃப் எடுக்கும் முயற்சிகளுக்கு நிதியுதவி வழங்குவேன் என முரடோவ் தெரிவித்திருந்தார். ஏலம் முடிந்த சில நிமிடங்களில் யுனிசெப் நிறுவனத்தில் பணம் வழங்கப்பட்டது.

  • பா. மகிழ்மதி
Comments (0)
Add Comment