பகுத்தறிவுக்கு வேலை கொடு!

நினைவில் நிற்கும் வரிகள்:

****

அறிவுக்கு வேலைகொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டுவிடு
காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்

மண்வெட்டி கையில் எடுப்பார்
சில பேர் மற்றவர்க்கு குழி பறிப்பார்
அது தன்பக்கம் பார்த்திருக்கும் என்பதை
தானறிய மறந்திருப்பார்

ஆகாத பழக்கமெல்லாம்
மனதுக்குப் பொருந்தாத வழக்கமெல்லாம்
ஆக்கத்தைக் கெடுத்துவிடும்
மனிதனின் அழிவுக்கு வழி வகுக்கும்

பந்தெடுத்து விட்டு எறிந்தால்
சுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும்
இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால்
பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ

அறிவுக்கு வேலைகொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டுவிடு
காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்

1970 -ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘தலைவன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் வாலி.

இசை: எஸ்.எம்.சுப்பையா நாயுடு, பாடியவர்: டி.எம்.சௌந்தராஜன்.

Comments (0)
Add Comment