இன்ப‌ துன்ப‌ங்க‌ள் யாவும் இயற்கையே!

நினைவில் நிற்கும் வரிகள்

தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
தன்மானம் போய்விடும்

சன்மானம் ஏது சொல்
தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
தன்மானம் போய்விடும்

கார்மேகக் கூட்டங்கள் கலையாமல்
மும்மாரி பெய்திட‌

பார் மீது பயிர்கள் செழித்திட
பக்குவமாய் நடனம் புரிவாய் நீ
பார் மீது பயிர்கள் செழித்திட
பக்குவமாய் நடனம் புரிவாய் நீ

(தீர்மானம்)

நான் கண்ட தெய்வங்கள் யாரென்று சொல்லு
நல்லோர்களில்லாரை என்றென்றும் தள்ளு
ஏனென்று கேட்பார்கள் இதமாக வெல்லு…

எல்லோர்க்கும் ஒருவ‌ன் உண்டென்று
எப்போதும் ஒரு நிலை நில்லு
இன்ப‌ துன்ப‌ங்க‌ள் யாவும் இயற்கை பொருள் வாழ்வில்
பண்பில் விளைந்திடுமே பெரும் தெம்பு நிறை சுகமே

கண்குளிர் காட்சிகளே வெரும் கற்பனை சூழ்ச்சிகளே
அற்புதம் என்னவுண்டு உலகில் ஆராய்ந்து பார்த்திடிலோ
அதிசயம் இல்லையதில் இகபரம் இரண்டிலும்

அன்பே தெய்வமென நினைத்து முடித்து
தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
தன்மானம் போய்விடும்
சன்மானம் ஏது சொல்
தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்

1962-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘விக்கிரமாதித்தன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் வாலி,  இசை:எஸ். ராஜேஸ்வர ராவ் குரல்: பி. சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன்.

Comments (0)
Add Comment