பூம்புகார் படத்தில் கவுந்தி அடிகளாக நடித்த கே.பி.சுந்தராம்பாள் ஒரு பாடல் வரியைப் பாட மாட்டேன் எனச் சொல்லிவிட்டார்.
கோவலன் கொல்லப்பட்டதும் கண்ணகி மதுரையை எரிக்கிறாள். அப்போது சுந்தராம்பாள் பாடுவதாகக் காட்சி. அந்த வரி இப்படி இருந்தது…
‘அன்று கொல்லும் அரசின் ஆணை வென்றுவிட்டது,
நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்றுவிட்டது?’
– “தெய்வம் எங்கே சென்றுவிட்டது எனக் கடவுளையே கேள்வி கேட்கும் பாடலை நான் பாட மாட்டேன்” எனச் சொல்லிவிட்டார். விஷயம் கலைஞரிடம் வந்தது. ஒரு விநாடி யோசித்தார்.
‘‘நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்துவிட்டது’’ என மாற்றினார். `தெய்வம் வந்துவிட்டது’ எனச் சொன்னதில் சுந்தராம்பாளுக்கு மகிழ்ச்சி.
கண்ணகியை `தெய்வம்’ எனச் சொல்லிவிட்டதில் கலைஞருக்கும் மகிழ்ச்சி. இதுதான் சாதுர்யம்.
நன்றி: முகநூல் பதிவு