செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்யும் ரோபோ!

தமிழ்நாடு முழுவதும் செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய ஹோமோசெப் என்ற ரோபோ பயன்படுத்தப்படவுள்ளது. இந்த ரோபோவை சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் கண்ணும் கருத்துமாக தயாரித்துள்ளனர்.

இந்த ரோபோவை இயக்க மனிதர்களின் உதவி தேவையில்லை. “துப்புரவுப் பணியாளர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். இதற்கு அரசு சாரா அமைப்பான சஃபாய் கரம்சாரி அந்தோலன் ஆதரவளிக்கிறது” என்கிறார் குழுவை வழிநடத்தும் பேராசிரியர் பிரபு ராஜகோபால்.

முதல் இரண்டு ரோபோக்கள், நாகம்மா மற்றும் ரூத் மேரி தலைமையிலான சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டன. அவர்களது கணவர்கள் துப்புரவுப் பணியின்போது பரிதாபமாக உயிரிழந்தனர்.

திட்டத்தின் முதன்மை ஆய்வாளர் பிரபு, “ஹோமோசெப் முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைத்தது. அவர்களின் முயற்சி மற்றவர்களை ஒரு அழுத்தமான சமூகப் பிரச்சனைக்கான தீர்வை உருவாக்க ஊக்கமளித்தது.

கல்லூரி இறுதியாண்டு முதன்மைத் திட்டமாக ரோபோவை உருவாக்கிய திவான்ஸ் குமாருக்கு நான் வழிகாட்டினேன்.

2019 ஆம் ஆண்டு ஐஐடி மெட்ராஸ் கார்பன் ஜெர்ப் போட்டியில் ரோபோவை காட்சிப்படுத்தினார்.

அடுத்தகட்ட முயற்சியில் ஈடுபட அவருக்கு முதல்கட்ட நிதியுதவி செய்யப்பட்டது” என்றார்.

அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் ரோபோக்களை தயாரித்து விநியோகிக்க அரசு உதவியையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறார்கள்.

பா. மகிழ்மதி

Comments (0)
Add Comment