சர்வதேச ஓபன் செஸ் தொடர் நார்வேயில் நடைபெற்றது. சர்வதேச தரவரிசையில் 2700 புள்ளிகளுக்கும் கீழ் உள்ளவர்கள் இந்த போட்டிகளில் பங்கேற்றனர். இந்தியா சார்பில் தமிழக வீரர் யங் ஜீனியஸ் பிரக்ஞானந்தா பங்கேற்றார்.
9 சுற்றுகளில் 7.5 புள்ளிகள் பெற்று பிரக்ஞானந்தா சாம்பியன் ஆனார். 16 வயதே நிரம்பிய பிரக்ஞானந்தா இந்த செஸ் தொடர் முழுதும் செம பார்மில் இருந்தார்.
அதாவது, மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் உலக சாம்பியன் கார்ல்சன், நெதர்லாந்தின் அனிஷ் கிரி உள்ளிட்ட ஜாம்பவான்களை சாய்த்து, இரண்டாவது இடம் பிடித்து பிரக்ஞானந்தா அசத்தினார்.
முதல் ஏழு சுற்றில் 4 வெற்றி, 3 ‘டிரா’ என்ற நிலையில் இருந்த அவர், 8-வது சுற்றில் இஸ்ரேலின் விக்டர் மிக்லெவ்ஸ்கியை வீழ்த்தி, கடைசி சுற்றில் இந்தியாவின் பிரனீத்தை எதிர்கொண்டார்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தா 49-வது நகர்த்தலில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். ஒட்டுமொத்தமாக 9 சுற்றில் 6 வெற்றி, 3 ‘டிரா’ செய்த பிரக்ஞானந்தா, 7.5 புள்ளிகள் பெற்று வெற்றி அடைந்தார். யங் ஜீனியஸ் பிரக்ஞானந்தாவுக்கு சாம்பியன் பட்டத்துடன் ரூ. 2.59 லட்சம் பரிசு கிடைத்துள்ளது.