இசைஞானி இளையராஜாவை வைத்து, NOISE AND GRAINS நிறுவனம் சமீபத்தில் ராக் வித் ராஜா எனும் இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியது.
தொடர்ந்து, ‘இசையென்றால் இளையராஜா’ எனும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி, ஜூன் 26 ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) மதுரை வேலம்மாள் குளோபல் கேம்பஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அனைத்து தரப்பு ரசிகர்களும், இசைஞானியின் இசையினை நேரடியாக ரசிக்கும் வகையில், குறைந்த விலையில் நுழைவுக்கட்டணம், ஆரம்ப விலையாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
NOISE AND GRAINS நிறுவனம், இசைப்புயல் AR ரஹ்மான் அவர்களின் “நெஞ்சே எழு”, பிரபல பின்னணி பாடகர் சித்ஸ்ரீராமின் “ALL LOVE NO HATE ” இசை நிகழ்ச்சி, பின்னணிப் பாடகர் ஹரிஹரன் அவர்களின் “மடை திறந்து” இசை நிகழ்ச்சி,
மறைந்த பின்னணிப் பாடகர் S.P.B மற்றும் K. J. யேசுதாஸ் இணைந்து சிங்கப்பூரில் “VOICE OF லெஜெண்ட்” , பிரபல பின்னணி பாடகர்கள் ஸ்ரீனிவாஸ்,
விஜயபிரகாஷ் அவர்களின் “மடை திறந்து”, ராக் ஸ்டார் அனிருத் “LIVE IN SINGAPORE ” எனும் நிகழ்ச்சிகளை நடத்தி இசை ரசிகர்களின் மனதை வருடிச்செல்ல வைத்தது.
அதோடு சமீபத்தில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் தமிழகக் கலை மற்றும் பண்பாட்டுத் துறையுடன் இணைந்து “நம்ம ஊர் திருவிழா” நிகழ்ச்சியும் மற்றும் பிரமாண்டமாய் “லெஜெண்ட்” திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்தியது NOISE AND GRAINS நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.