இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.
தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த மிதாலி ராஜ், தனது சகோதரருடன் சேர்ந்து இளம் வயதில் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டார். இளையோர் கிரிக்கெட்டில் சாதித்த மிதாலி ராஜ், 1999-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார்.
183 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்ற மிதாலி ராஜ், தொடர்ந்து 7 அரைசதங்கள் அடித்த வீராங்கனை ஆவார். தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்திய மகளிர் அணிக்காக 12 டெஸ்டுகள், 232 ஒருநாள், 89 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக இந்திய அணி பங்கேற்ற 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் அவர் விளையாடினார்.
டெஸ்டில் 1 சதமும் ஒருநாள் கிரிக்கெட்டில் 7 சதங்களும் எடுத்துள்ளார். அதேபோல டெஸ்டில் 4 அரை சதங்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 64 அரை சதங்களும் டி20-யில் 17 அரை சதங்களும் எடுத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் மிதாலி ராஜின் சாதனைகள்:
* மகளிர் கிரிக்கெட்டில் அதிக சர்வதேச ரன்கள் (10,868 ரன்கள்) எடுத்த வீராங்கனை.
* ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக (7805) ரன்கள் எடுத்த வீராங்கனை.
* ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக இன்னிங்ஸில் (211) விளையாடியவர்.
* டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீராங்கனை, 2364 ரன்கள்.
* மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 50+ ரன்களை 50 முறை எடுத்த முதல் கேப்டன்.
* ஒருநாள் கிரிக்கெட்டில் சதமடித்த இளம் வீராங்கனை. 1999-ல் அயர்லாந்துக்கு எதிராக 114 ரன்கள் எடுத்தார்.
* ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் இருமுறை (2005, 2017) இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய ஒரே கேப்டன்.
* 2006-ல் இந்திய மகளிர் அணி விளையாடிய முதல் டி20 ஆட்டத்தின் கேப்டனாகச் செயல்பட்டவர் மிதாலி ராஜ்.
மூன்று டி20 உலகக் கோப்பை உள்பட 32 டி20 ஆட்டங்களில் கேப்டனாக இருந்துள்ளார்.
2019 செப்டம்பர் மாதம் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மிதாலி ராஜ் அறிவித்தார்.
32 டி20 ஆட்டங்களிலும் மூன்று டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கியுள்ளார்.
22 வருடங்கள் 274 நாள்கள் – மிதாலி ராஜ்
22 வருடங்கள் 91 நாள்கள் – சச்சின் டெண்டுல்கர்
21 வருடங்கள் 184 நாள்கள் – ஜெயசூர்யா
(சச்சின், மிதாலி ஆகிய இருவரும் ஒரே வயதில், 16 வருடங்கள், 205 நாள்கள் இந்திய அணிக்கு அறிமுகமானார்கள்.)