சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழ்நாடு முதலிடம்!

மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் சுற்றுலா பயணிகள் வருகை பற்றிய இந்திய சுற்றுலா துறையின் புள்ளிவிவரத்தின்படி, 2020ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

மொத்த பயணிகள் வருகையில் 22.9 சதவீத பங்கை பெற்றுள்ளது. ஆண்டில் 1 கோடியே 40 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளுடன் உள்நாட்டுச் சுற்றுலாவிலும் முதலிடம் பெற்றுள்ளது.

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பொறுத்தவரை, மகாராஷ்டிராவை அடுத்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

தமிழ்நாடு 1.23 மில்லியன் பயணிகளையும் மகாராஷ்டிரா 1.62 மில்லியன் பயணிகளையும் பெற்றுள்ளன.

பயணிகள் வருகையில் வங்கதேசம், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் பிரதானமாக இருக்கின்றன. இந்தியாவில் அவை 45 சதவீதம் பங்களிப்பைச் செலுத்துகின்றன.

சென்னை சர்வதேச விமான நிலையம் 6.6 சதவீதம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் நுழைவாயிலாக இருக்கிறது.

இலங்கையிலிருந்து 52%, சிங்கப்பூரிலிருந்து 22.5%, மலேசியாவிலிருந்து 20.4%, பிரான்சிலிருந்து 18.8% மற்றும் தென் கொரியாவிலிருந்து 16.8% பேர் சென்னையை விருப்பமான நுழைவுவாயிலாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டிலுள்ள ஐந்து யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றான மாமல்லபுரம் சிற்பங்கள், உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளிடையே இரண்டாவது மிகவும் பிரபலமான நினைவுச்சின்னமாக இருக்கிறது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளிடையே ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது.

பா. மகிழ்மதி

Comments (0)
Add Comment