வாழையும், பசுவும் ஏழைக்கு செல்வம்!

நினைவில் நிற்கும் வரிகள்:

சத்தியம் நீயே தருமத் தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே.

குங்குமக் கலையோடு
குலம் காக்கும் பெண்ணை
குணத்தில் பசுவென்று
சொல்வார்கள் கண்ணே

காலையிலே உன் முகம் பார்த்த பின்னே
கடமை செய்வாள்
எங்கள் தமிழ் நாட்டு பெண்ணே

(சத்தியம்)

பால் கொடுப்பாய்
அது தாயாரை காட்டும்

பாசம் வைப்பாய்
அது சேயாகத் தோன்றும்

அம்மாவை அம்மா என்று
அழைக்கின்ற சொல்லும்
அம்மாவை அம்மா என்று
அழைக்கின்ற சொல்லும்
அன்பான தமிழுக்கு நீ தந்ததன்றோ

(சத்தியம்)

வளர்த்தவரே உன்னை மறந்து விட்டாலும்
அடுத்தவரிடத்தில் கொடுத்து விட்டாலும்
வளர்ந்த இடத்தை நீ மறக்காத செல்வம்
வாய் மட்டும் இருந்தால்
நீ மொழி பேசும் தெய்வம்

(சத்தியம்)

தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு
பொன்னையே தந்தாலும்
உனக்கேது ஈடு
பூப்போலே வைத்துன்னை
காப்பதென் பாடு

(சத்தியம்)

-1970-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த ‘மாட்டுக்கார வேலன்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் கண்ணதாசன், இசை: கே.வி. மகாதேவன் குரல்: டி.எம். சவுந்தரராஜன். 

Comments (0)
Add Comment