உழைப்போர் யாவரும் ஒன்று!

நினைவில் நிற்கும் வரிகள்:

****

நேருக்கு நேராய் வரட்டும்
நெஞ்சில் துணிவிருந்தால்
என் கேள்விக்கு பதிலை தரட்டும்
நேர்மை திறமிருந்தால்!

உழைப்போர் யாவரும் ஒன்று
என்னும் உணர்வினில் வளர்வது இன்று
வலியோர் ஏழையை வாட்டிடும் கொடுமை
இனி ஒரு நாளும் நடக்காது!

(நேருக்கு)

பட்டினியால் தினம் ஒட்டிய வயிறு
பாதையில் தவிக்குதடா
சில பாவிகள் ஆணவம் மக்களின் உயிரை
தினம் தினம் பறிக்குதடா!

மாறினால் மாற்றட்டும்
இல்லையேல் மாற்றுவோம்
தீமைகள் யாவையும்
கூண்டிலே ஏற்றுவோம்

(நேருக்கு)

நீதியின் தீபத்தை ஏந்திய கைகளின்
லட்சிய பயணமிது
இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும்
தாங்கிடும் இதயமிது

அண்ணனின் பாதையில்
வெற்றியே காணலாம்
தர்மமே கொள்கையாய்
நாளெல்லாம் காக்கலாம்!

(நேருக்கு)

தனி ஒரு மனிதனுக்கு
உணவில்லை என்றால்
ஜகத்தினை அழித்திடுவோம்!

என்று தமிழ் கவி பாரதி
பாடியா பாட்டை நடைமுறை ஆக்கிடுவோம்
சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம்
அன்னையின் பூமியே தெய்வமாய் எண்ணுவோம்!

(நேருக்கு நேராய் வரட்டும்)

-1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த ‘மீனவ நண்பன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் புலமைப் பித்தன். இசை: எம்.எஸ். விஸ்வநாதன், குரல்: டி.எம். சவுந்தரராஜன்.

Comments (0)
Add Comment