உலக வில்வித்தை தரவரிசையில் விஜயவாடாவைச் சேர்ந்த வில்வித்தை வீராங்கனை வெண்ணம் ஜோதி சுரேகா, உலகின் மூன்றாவது வில்வித்தை வீராங்கனையாக இடம்பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் இடம்பிடித்த முதல் இந்திய வில்வித்தை வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட தரவரிசையில், ஆறாவது இடத்திலிருந்த ஜோதி சுரேகா, 188.45 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அமெரிக்காவில் நடந்த 2021 ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் காட்டிய செயல்திறன், அவரது தரவரிசையை மேம்படுத்த உதவியது.
கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள சல்லப்பள்ளி கிராமத்தில் ஜூலை 3, 1996 அன்று வெண்ணம் ஜோதி சுரேகா பிறந்தார். பால்யத்தில் நீச்சல் வீரராக இருந்தார்.
2020 ஆம் ஆண்டில் 4 வயது 11 மாதம் இருக்கும்போது கிருஷ்ணா நதியைக் கடந்து இந்தியாவின் இளம் நீச்சல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
இது லிம்கா சாதனை புத்தகத்தில் பதிவானது. பின்னர், வில்வித்தையில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்ட அவர், சிறந்த வில்வித்தை வீரர்களின் வழிகாட்டுதலில் கடுமையாக பயிற்சி பெற்றார்.
ஜோதி சுரேகா இதுவரை, 27 தேசிய மற்றும் 41 சர்வதேச போட்டிகளில், 58 தேசிய பதக்கங்களை (37 தங்கம், 13 வெள்ளி, 9 வெண்கலம்) வென்றுள்ளார். அவர், 2017 ஆம் ஆண்டிற்கான அர்ஜுனா விருதைப் பெற்றார்.
மேலும், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் நான்கு வெள்ளிகள் உட்பட 6 வெற்றிப் பதக்கங்களைப் பெற்றிருக்கிறார்.
பா. மகிழ்மதி