சாக்ரடீஸின் பொன்மொழிகள்:
உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் இருக்கும். உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை இருக்கும்.
நீங்கள் விரும்பிய வண்ணம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள தளராமல் முயற்சி செய்யுங்கள்.
உங்களுடைய உலகம் உங்களிடமிருந்தே தொடங்குகிறது.
உனக்கு மிகவும் சுவை தரும் பொருள் பசி.
மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்; ஆடம்பரம் என்பது நாமே தேடிக்கொள்ளும் வறுமை.
எனக்கு ஒரே ஒரு விஷயம் தான் தெரியும். அது என்னன்னா எனக்கு எதுவுமே தெரியாது அதுதான்.
மதிப்பற்ற மக்கள் உணவுக்காக மட்டுமே வாழ்கிறார்கள்; மதிப்புடைய மக்கள் வாழ்வதற்காகவே மட்டுமே என்கிறார்கள்.
உங்களுக்கு எதுவும் தெரியாது என்பதை தெரிந்து இருப்பதிலேயே உண்மையான ஞானம் இருக்கிறது.
ஆய்வு செய்யப்படாத வாழ்க்கை மதிப்புமிக்க வாழ்க்கை அல்ல.
நான் புத்திசாலி என்பது எனக்கு தெரியும் ஏனென்றால் எனக்கு ஒன்றும் தெரியாது என்பதை நான் அறிந்திருக்கிறேன்.
ஒவ்வொரு நடவடிக்கையும் அதன் மகிழ்ச்சியையும் அதன் விளைவையும் கொண்டுள்ளது.
நீங்கள் செய்ய விரும்புவதை செய்வதற்கு முயற்சிப்பதே ஒரு நல்ல நற்பெயரை பெறுவதற்கான வழி.