வாழும்போதே நன்றி சொல்வோம்!

நினைவில் நிற்கும் வரிகள்:

******

உள்ளத்தில் இருப்பதெல்லாம்
சொல்ல ஓர் வார்த்தையில்லை
நான் ஊமையாய் பிறக்கவில்லை
உணர்ச்சியோ மறையவில்லை

என் தங்கமே உனது மேனி
தாங்கி நான் சுமந்து செல்ல..
எனக்கொரு பந்தமில்லை
எவருக்கோ இறைவன் தந்தான்

*****

நாலு பேருக்கு நன்றி
அந்த நாலு பேருக்கு நன்றி!
தாய் இல்லாத அனாதைக்கெல்லாம்
தோள் கொடுத்து தூக்கிச் செல்லும்

(நாலு)

உறவு என்றும் பாசம் என்றும்
இறைவன் பூட்டிய விலங்கு
அழுவதற்கும் சிரிப்பதற்கும்
அமைத்த உள்ளம் ஒன்று!

ஆற்று வெள்ளம் தானே ஓடும்
ஆசை வெள்ளம் சொந்தம் தேடும்
சொந்தம் ஏதும் இல்லை என்றால்!

(நாலு)

இன்பத்தையே பங்கு வைத்தால்
புன்னகை சொல்வது நன்றி
துன்பத்திலே துணை வந்தால்
கண்ணீர் சொல்வது நன்றி

வாழும் போது வருவோர்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்
வார்த்தை இன்றி போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்
அந்த நாலு பேருக்கு நன்றி!

(நாலு)

1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘சங்கே முழங்கு‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

இசை : எம்.எஸ். விஸ்வநாதன், குரல் : டி.எம். சவுந்தரராஜன்.

Comments (0)
Add Comment