மக்கள் திலகத்தை வைத்துப் பணம் எடுத்தேன்!

– இயக்குநர் ஏ.பி.நாகராஜன்

பரண்:

*

“நடிகர் திலகத்தை வைத்து ஆசை தீரப் பல படங்களைத் தயாரித்த ஏ.பி.என் அவர்கள் மக்கள் திலகத்தை வைத்து ஒரே ஒரு படம் தான் தயாரித்தார்.

அந்தத் திரைப்படம் தான் ‘நவரத்தினம்’.

‘நவராத்திரி’ படத்தை அப்படியே தலைகீழாக மாற்றி எடுக்கப்பட்ட திரைப்படமே ‘நவரத்தினம்’.

‘நவராத்திரி’யில் கதாநாயகி வீட்டை விட்டு ஓடி ஒன்பது இரவுகளில் ஒன்பது ஆண் மக்களைச் சந்திக்கிறாள்.

நவரத்தினம் படத்தில் கதாநாயகன் வீட்டை விட்டு ஓடி ஒன்பது பெண்களைச் சந்திக்கிறான் என்பதே கதை.

இப்படம் எடுத்த அனுபவத்தையும், நடிகர் திலகத்தை வைத்துத் திரைப்படம் எடுத்த அனுபவத்தையும் ஒப்பிட்டுப் பத்திரிகையாளர்கள் கேள்விகள் கேட்டார்கள்.

அதற்கு ஏ.பி.நாகராஜன் அவர்கள் ஒரு (நவ) ரத்தினச் சுருக்கமான பதிலைச் சொன்னார்.

“நான் நடிகர் திலகத்தை வைத்துப் படம் எடுத்தேன்.

மக்கள் திலகத்தை வைத்துப் பணம் எடுத்தேன்”

  • கார்த்திகேயன் எழுதிய ‘அருட்செல்வர் ஏ.பி.என்’ என்ற நூலில் இருந்து ஒரு பகுதி. வெளியீடு: அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை.
Comments (0)
Add Comment