சேர்ந்து
திரியும்
சிட்டுக்குருவிகளை
பார்க்கும்போது
ஞாபகத்திற்கு
வருகிறது
ஏதேதோ!!
மறந்த
ஞாபகங்கள்
எல்லாம்
பறந்து வருகின்றன!!
சேர்ந்து
விரித்த
சிறகுகளும்
சிறகடிப்புகளும்
எங்கே
என்று
எங்கே
தேட?
வானம்
எங்கும்
சிறகடிக்கின்றன
ஞாபகங்கள்!!
தனிமையில்
அமர்ந்த
தருணம்
தாழ்வாரத்தில்
சரஞ்சரமாய்
குருவிகள்!!
கூடு என்பது
அடைவதற்கு
மட்டும்தான்
வாழ்வதற்கு
அல்லவே?
குருவிகளுக்கு எது
சொல்லியதோ
அதுவே நமக்கும்
சொன்னது!!
மனிதன்
கூட்டிற்குள்ளே
அடைந்து
கிடக்கிறான்!!
ஏன் அடைந்து
கிடக்கிறான்
என எட்டி பார்க்கும்
குருவிகளை அவனே
விரட்டுகிறான் !!
வானம்
தானே
வாழ்வு
குருவிகளுக்கு எது
சொல்லியதோ
அதுவே நமக்கும்
சொன்னது
அவை
உயரத்தில்
பறக்கும் பெரும் கூட்டங்களாய் !
நாமோ
நம் கூட்டுக்குள்
அடைந்த சிறு
கூட்டங்களாய்!!!
இயற்கை
அறிவை
இயற்கையிலே
பெறுதல்
ஒரு வகை
இயற்கை அறிவை
இயற்கை எய்தும் வரை
பெறாதல்
ஒரு வகை
எட்டி
பார்க்கும்
குருவிகளை
எட்டி பாருங்கள்
எட்டாத
உயரங்கள்
எட்டும்
மொழிகளைவிட
குருவிகளின்
குக்கூக்கள்
இனிமையானவை!
– நன்றி: வைரா முகநூல் பதிவு