8 நிமிடத்திற்கு ஒரு குழந்தை காணாமல் போகிறதா?

சர்வதேச தொலைந்துபோன குழந்தைகள் தினம் (மே-25) இன்று அனுசரிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் 1979-ம் ஆண்டு மே 25 ம் தேதி நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த இட்டன் பாட்ஷ் என்ற 6 வயது குழந்தை பள்ளிக்குச் செல்லும் வழியில் வழியில் காணாமல் போய்விட்டான்.

இட்டன் பாட்ஷின் தந்தை, புகைப்படக் கலைஞராக இருந்ததால் தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுக் குழந்தையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

அவரது தீவிர தேடுதல் வேட்டையை அங்கிருந்த ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிட்டது. ஊடக நிறுவனங்களின் இந்த நடவடிக்கையால் 1979-ம் ஆண்டில் இருந்து 1981-ம் ஆண்டு வரையில் குளம், ஆறு போன்ற இடங்களில் அடையாளம் தெரியாமல் காணாமல் போன 29 குழந்தைகள் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையொட்டி 1983-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ரீகன் மே 25-ம் தேதியை காணாமல் போகும் குழந்தைகளுக்கான தேசிய தினமாக அறிவித்தார்.

அன்றிலிருந்து மே 25-ம் தேதி காணாமல் போகும் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது

இந்நாளில் சர்வதேச அளவில் பல நாடுகள் குழந்தை கடத்தல் அச்சுறுத்தல் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் குழந்தைகளாக உள்ளனர். இதில் 8 நிமிடத்துக்கு ஒரு குழந்தை காணாமல் போகிறது.

ஆண்டுக்கு சராசரியாக ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போகின்றனர். இதில் பெண் குழந்தைகள் 55 சதவீதமும், ஆண் குழந்தைகள் 45 சதவீதமும் காணாமல் போகிறார்கள்.

தமிழகத்தில் மட்டும் 11 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போகின்றனர் என்றும் தேசியக் குற்றப் பதிவு ஆணையச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் மேற்கு வங்கமும், அடுத்த இடத்தில் தமிழகமும் இருக்கிறது.

இப்படியான சூழ்நிலையில் அத்தகைய குழந்தைகளின் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் காணாமல் போன குழந்தை உணர்வை அடைய இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.

Comments (0)
Add Comment