“எனக்குப் பிடித்த நடிகர் ஜெரி லூயிஸ். அவர் படத்தைப் பார்த்தால் நீங்களே என் முடிவுக்கு வருவீர்கள். அப்படி வரவில்லை என்றால் தயவுசெய்து வெளியே சொல்லாதீர்கள். என் மனம் புண்படும்.’’ என்று சொல்லும் நாகேஷிடம் “நாகேஷ் ‘தாய்’ நாகேஷ் ஆன கதை?’’ என்றதும் சொன்ன பதில்.
‘’தை தண்டபாணி என்ற வேடத்தை ‘இதயம் பேசுகிறது’ மணியன் எழுதிய ‘டாக்டர் நிர்மலா’ என்ற நாடகத்தில் நடித்தேன்.
நாடகத்திற்குத் தலைமை தாங்கியவர் என் நடிப்பைப் பாராட்டிப் பேசும் போது ‘’இனிமேல் இவரை ‘தை நாகேஷ்’ என்றே அழைக்கலாம்’’ என்றார்.
இந்த நாடகத்தை விமர்சனம் செய்த ‘சுதந்திரா’ என்ற ஆங்கிலப் பத்திரிகை ‘தை என்பதை ஆங்கிலத்தில் ‘Thai Nagesh‘ என்று எழுதினார்கள்.
அதை மற்ற தமிழ்ப் பத்திரிகைகள் மொழி மாற்றம் செய்து பிரசுரித்த போது ‘தாய் நாகேஷ்’ என்று எழுதினார்கள்.
எப்படிச் சாப்பிட்டால் என்ன? தை ஆக இருந்தாலும், தாய் ஆக இருந்தாலும் நாகேஷ் நான் தானே’’ என்று கூறியிருக்கிறார் நாகேஷ்.