“காமராஜரின் கட்சிப்பற்று எனக்கு அவரிடம் மதிப்பையும், பெரியாரின் ஓயாத உழைப்பு அவரிடம் மதிப்பையும், ராஜகோபாலாச்சாரியாரின் பேரறிவு அவரிடம் மதிப்பையும், ம.பொ.சி.யின் தியாகம் அவரிடம் மதிப்பையும் எனக்கு அளித்திருக்கிறது’’ என்று தம்பி கருணாநிதி ம.பொ.சி. விழா ஒன்றில் பேசியதை அறிந்து மிக மகிழ்ந்தேன்.
எனக்கு ஓர் தணியாத ஆவல் – என் இயல்புகளை என் தம்பிகள் பெற வேண்டும் என்பதில் – ஆற்றலைப் பற்றிய ஐயப்பாடு எனக்கு எழுந்ததே இல்லை – எனக்கென்று அமைந்துள்ள இயல்புகள் என் தம்பிகளுக்கு முழுக்க ஏற்பட வேண்டும் என்ற ஆவல்.
எனவே தான் நான் மகிழ்ந்து வரவேற்கும் இயல்பான, மற்ற கட்சித்தலைவர்களை மதித்திடும் இயல்பு போற்றத்தக்கது என்ற கருத்துப்பட்ட தம்பி கருணாநிதி பேசியதை அறிந்து மெத்தவும் மகிழ்ச்சி அடைந்தேன்’’
-அண்ணா ஆசிரியராக இருந்து நடத்திய ‘காஞ்சி’ இதழில் 1965-ல் வெளியான அண்ணாவின் பேச்சு.