அகழாய்வுப் பணிகள் நடக்க வேண்டிய இடங்கள்!

தமிழ்நாட்டில் தற்போது அகழாய்வுப் பணிகள் நடக்கும் இடங்களும் நடக்க வேண்டிய இடங்களும்.

1) ஆதிச்சநல்லூர்,
2) கோவலன்பொட்டல்,
3) அமிர்த மங்கலம்,
4) செம்பியன் கண்டியூர்,
5) கீழடி,
6) கொடுமணல்,
7) அழகன்குளம்,
8)அரிக்கமேடு,
9) கரூர்,
10) தர்மபுரி,
11) ஸ்ரீவில்லிபுத்தூர்,
12) திருத்தங்கல்,
13) டி. கல்லுப்பட்டி (மதுரை மாவட்டம்)
14) மாங்குடி (திருநெல்வேலி மாவட்டம்)
15) மயிலாடும்பாறை (கிருஷ்னகிரி மாவட்டம்)
16) மயிலாடுதுறை (தேனி மாவட்டம்)
17) பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்)
18) குடியம் குகை,
19) அத்திரம்பாக்கம்,
20) பட்டரைப்பெரும்புதூர்- (திருவள்ளூர் மாவட்டம்)
21) வடமதுரை,
22) பரிகுளம்,
23) பையனப்பள்ளி,
24) தேரி,
25) தாமிரபரணி (ஆற்றின் கரையோரம்),
26) அப்புக்கள்,
27) மல்லப்பாடி,
28) குட்டூர் மலை,
29) மோதூர்,
30) சானூர்,
31) குன்றத்தூர்,
32) சித்தன்னவாசல்,
33) மேட்டூர்,
34) கல்லேரி மலை,
35) தாண்டிக்குடி (திண்டுக்கல் மாவட்டம்)
36) ஆண்டிபட்டி- செங்கம்,
37) கொற்கை,
38) அதியமான்கோட்டை,
39) உறையூர்,
40) வல்லம்,
41) திருக்கோயிலூர்,
42) செவல்பட்டி(விருதுநகர் மாவட்டம்)
43) திருவேங்கடம்
44) கழுகுமலை,
45) வீரிருப்பூ- (சங்கரன்கோவில்)
46) தேரிருவேலி (ராமநாதபுரம்)
47) மாமல்லபுரம் – வசவசமுத்திரம்
48) பூம்புகார்,
49) தொண்டி,
50) மரக்காணம்,
51) வேலூர்,
52) பெரியபட்டணம்,
53) சதுரங்கப்பட்டினம்,
54) காஞ்சிபுரம்,
55) குறும்பன் மேடு (தஞ்சை மாவட்டம்)
56) கங்கைகொண்ட சோழபுரம் / பழையாறை,
57) மாளிகை மேடு,
58) தாராசுரம்,
59) கண்ணனூர் (சமயபுரம்)
60) சம்புவராயர்களின் தலைநகரமான படைவீடு,
61) செஞ்சிக்கோட்டை,
62) தரங்கம்பாடி,
63) பாஞ்சாலங்குறிச்சி,
64) கன்னியாகுமரி – திருப்பதிசாரம் மற்றும்
65) திருவட்டாறு,
66) குமரிமுனை,
67) வள்ளியூர் (திருநெல்வேலி மாவட்டம்)
68) கரிவலம்வந்த நல்லூர்,
69) பொருந்தல் (பழனி)
70) வெம்பக்கோட்டை,
71) விஜயகரிசல் குளம்,
72) துலுக்கன் குறிச்சி,
73) சேந்தமங்கலம்,
74) பொதிகை மலை,
75) கொல்லிமலை.

ஆகிய தமிழ்நாட்டு இடங்களில் அகழாய்வு செய்ததன் மூலம் தமிழனின் தொன்மையான வரலாற்றை நாம் அறியலாம்.

1. கேரளா- பட்டணம்
2. கர்நாடகம்- தலைக்காடு
3. ஆந்திரம் -வேங்கி
4. ஒடிசா- பாலூர்

ஆகிய வெளி மாநிலங்களில் உள்ள பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்மூலம் நாம் பல்வேறு தொன்மையான வரலாற்றை வெளிகொண்டு வரலாம் .

கீழடி, கொடுமணல் மற்றும் பொருந்தல் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம் தமிழி எழுத்துக்களின் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு
என்று அறிவியல் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது.

மேலும், 2600 ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழ் மக்கள் பரவலான எழுத்தறிவு பெற்ற சமுகமாக விளங்கினர்.

அவ்வாறு அறிவியல்வழி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் கிடைத்த ஆய்வு முடிவுகள் சிலவற்றை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

கீழடிக்கு அருகே அகரம் அகழாய்வுத் தளத்தில் சேகரிக்கப்பட்ட மண்மாதிரிகளை மகரந்தம் மற்றும் பைட்டோலித் முறையில் பகுப்பாய்வு செய்ததில், அங்கே நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

சிவகளை வாழ்விடப் பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வு செய்ததில், அங்கே நீர் செல்லும் செங்கல் வடி காலில் நன்னீர் சென்றுள்ளதாகவும், தேக்கிவைக்கப்பட்ட நீர்நிலையிலிருந்து இந்நீர் கொண்டு வரப்பட்டதாகவும் ஆய்வில் தெரிய வருகிறது.

தமிழ்நாடு தொல்லியல் துறையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மயிலாடும்பாறை என்ற இடத்தில் ஈமச்சின்னங்கள் மற்றும் வாழ்விடப் பகுதியில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

பாறை ஓவியங்கள், புதிய கற்காலக் கருவிகள் என அரியவகை தொல்லியல் அடையாளங்களைக் கொண்ட மயிலாடும்பாறையின் வாழ்விடப் பகுதியில் 104 செ.மீ. மற்றும் 130 செ.மீ. ஆழத்தில் சேகரிக்கட்டட்ட இரண்டு கரிம மாதிரிகள், அமெரிக்காவிலுள்ள ப்ளோரிடா மாநிலத்தின் பீட்டா பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

அந்தப் பகுப்பாய்வின் காலக் கணக்கீடு முடிவுகள் தற்போது பெறப்பட்டுள்ளன. அவற்றின் சராசரி மைய அளவீட்டுக் காலம் முறையே கி.மு. 1615 மற்றும் கி.மு. 2172 என்று காலக்கணக்கிடு செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம், தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4200 ஆண்டுகளுக்கு முன்னரே நிலவி வந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் இரும்புக் காலப் பண்பாடு நிலவிய கங்கைச் சமவெளி, கர்நாடகம் உள்ளிட்ட 28 இடங்களில் இதுவரை காலக் கணக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் தற்போது கிடைத்துள்ள மயிலாடும்பாறை ஆய்வு முடிவுகளான, 4200 ஆண்டுகளுக்கு என்பதே. காலத்தால் முந்தியது.

அதேபோன்று, கருப்பு – சிவப்பு பானை வகைகள் 4200 ஆண்டுகளுக்கு முன்னரே அதுவும் புதிய கற்காலத்தின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதையும் அறிய முடிகிறது.

தற்போது 2022ஆம் ஆண்டில் கீழ்க்காணும் ஏழு இடங்களில் அகழாய்வுகள் செய்யப்படவுள்ளன.

1. கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்கள் (கொந்தகை, அகரம்,
மணலூர்), சிவகங்கை மாவட்டம் – எட்டாம் கட்டம்
2. சிவகளை, தூத்துக்குடி மாவட்டம் – மூன்றாம் கட்டம்
3. கங்கைகொண்டசோழபுரம், அரியலூர் மாவட்டம்- இரண்டாம் கட்டம்
4. மயிலாடும்பாறை, கிருஷ்ணகிரி மாவட்டம் – இரண்டாம் கட்டம்
5. வெம்பக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் – முதல் கட்டம்
6. துலுக்கர்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் – முதல் கட்டம்
7. பெரும்பாலை, தர்மபுரி மாவட்டம் –

தற்காலத் தொல்லியலில் இரண்டு வகையான அகழ்வாய்வு வகைகள் உண்டு:

1)ஆய்வுக்குரிய அகழ்வாய்வு – ஒரு இடத்தில் முழு அளவிலான அகழ்வாய்வைச் செய்வதற்கான நேரமும், இடமும் இருக்கும்போது இவ்வகை அகழ்வாய்வு நடத்தப்படுகின்றது.

இது தற்போது, போதிய நிதியையும், தன்னார்வ உழைப்பையும் பெற்றுக்கொள்ளக் கூடிய கல்வியாளர்கள் மற்றும் தனிப்பட்ட அமைப்புக்களினால் கைக்கொள்ளப் படுகின்றது. அகழ்வின் அளவு வேலைகள் நடைபெறும் காலத்தில் வேலைகளை இயக்குபவரால் தீர்மானிக்கப்படுகின்றது.

வளர்ச்சி சார்ந்த அகழ்வாய்வு – இது தொழில்முறைத் தொல்லியலாளர்களால் செய்யப்படுகிறது. தொல்லியல் களம், கட்டிடச் செயற்பாடு போன்ற

2) வளர்ச்சித் திட்டங்களினால் பாதிக்கப்படும் நிலை வரும்போது இவ்வகை அகழ்வாய்வுகள் நடத்தப்படுகின்றன.

பொதுவாக வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப் படுத்துபவர்களே இவ்வாய்வுக்கான நிதியையும் வழங்குவர்.

இத்தகைய சூழ்நிலைகளில் நேரம் மட்டுப்பட்டதாக இருப்பதுடன், ஆய்வுகளும் வளர்ச்சித் திட்டத்தினால் பாதிப்புறும் இடங்களை மட்டுமே கவனத்தில் கொள்கின்றன. வேலையாட்களும் பொதுவாக அகழ்வாய்வு செய்வதில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பர்.

வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

Comments (0)
Add Comment