பிரபல பாடகியாக இருந்து இப்போது ஆசிரியையாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் திருமதி ஜென்சி அவர்கள் பிறந்தநாள் இன்று (மே-21).
காதல் ஓவியம் – அலைகள் ஓய்வதில்லை
கீதா சங்கீதா -அன்பே சங்கீதா
இரு பறவைகள் மலை முழுவதும்,
பூத்து நிக்குது காடு – எச்சில் இரவுகள்
என் கானம் இன்று அரங்கேறும் – ஈர விழி காவியங்கள்
போன்ற புகழ்பெற்ற அவருக்கே பிடித்த பாடல்களை பாடிய பெருமைக்குரியவர்
ஜென்சி.
1978 ல் ‘திரிபுரசுந்தரி’ திரைப்படத்தில் இடம்பெற்ற “வானத்து பூங்கிளி” பாடல் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். அந்தப் படத்திற்கு இசை இளையராஜா.
அடுத்த நான்கு ஆண்டுகள் இவருடைய இனிய குரல் தமிழ் திரைப்பட பாடல்கள் மூலம் கொடி கட்டிப் பறந்தது.
அடிபெண்ணே – முள்ளும் மலரும்,
என்னுயிர் நீதானே – ப்ரியா,
தம்தனா நம்தனா – புதிய வார்ப்புகள்,
என் வானிலே – ஜானி,
தெய்வீக ராகம் – உல்லாச பறவைகள்,
மீன் கொடி தேரில் – கரும்பு வில்,
ஆயிரம் மலர்களே – நிறம் மாறாத பூக்கள்,
இவையனைத்தும் இசைஞானியின் மாயாஜாலத்தில் இவர் குரல் மூலம் புகழ் பெற்ற பாடல்களாகும்.
திடீரென்று தனது புகழ் எனும் கொடி கட்டிப் பறந்த வேளையில் திரையுலகை விட்டு விலகி விட்டார். கேரள அரசுப் பள்ளியில் இசை ஆசிரியராக பணியை தொடர்ந்து கொண்டு, பக்திப் பாடல்கள் மட்டும் பாடத்துவங்கினார்.
இருந்தாலும் நான்கு தலைமுறை தாண்டியும் இவர் பாடிய பாடல்கள் மூலம்
தமிழ் ரசிகர்கள் இதயத்தில் நீங்காத இடம் பெற்றுள்ளது தான் இவருடைய குரலின் சிறப்பு.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இதுவரை 90 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
தமிழில் இவர் பாடிய அனைத்துப் பாடல்களும் புகழ்பெற்ற பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு இசைஞானியும் ஒரு காரணம்.
ஆரம்ப காலத்தில் பாடல் பாட கொச்சியில் இருந்து சென்னைக்கு தனது தந்தையுடன் வந்து பாடல் பாடிவிட்டு மீண்டும் கொச்சிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.
அந்த சமயத்தில் இங்கே இவருடைய பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு, புகழ் இவை எதுவுமே அறியாமல் தான் இருந்துள்ளார்.
இளையராஜா இவரை இங்கேயே தங்கி பாட வற்புறுத்தினாலும், தனது தந்தையின்
வேண்டுகோளுக்காக அரசு வேலையை ஏற்று அங்கேயே தங்கி விட்டார்.
தமிழில் இவர் பாடிய பாடல்கள் குறைவே என்றாலும் அவை அனைத்தும் புகழ் பெற்ற பாடல்கள்.
ஆடச் சொன்னாரே
(வட்டத்துக்குள் சதுரம)
அலங்கார பொன் ஊஞ்சலே
(சொன்னது நீதானா)
கீதா சங்கீதா
(அன்பே சங்கீதா)
மயிலே மயிலே
(கடவுள் அமைத்த மேடை)
தோட்டம் கொண்ட ராசாவே
(பகலில் ஒரு இரவு)
ஹேய் மஸ்தானா
(அழகே உன்னை ஆராதிக்கிறேன் )
பூ மலர்ந்திட நடமிடும்
(டிக்! டிக்! டிக்! )
பனியும் நானே மலரும் நீயே
(பனிமலர்)
என் கானம் எங்கு அரங்கேறும்
(ஈர விழி காவியங்கள்)
கல்யாணம் என்னை முடிக்க
(மெட்டி)
பூத்து நிக்குது காடு,
என் கானம் எங்கு அரங்கேறும்
(எச்சில் இரவுகள்)
ஆத்தோரம் காத்தாட
(எங்கேயோ கேட்ட குரல்)
வானத்துப் பூங்கிளி
(திரிபுரசுந்தரி)
அடி பெண்ணே
(முள்ளும் மலரும்)
அலங்கார பொன் ஊஞ்சலே
(சொன்னது நீதானா)
௭ன் உயிர் நீதானே
(பிரியா)
தம்தன நம்தன
(புதிய வார்ப்புகள்)
இதயம் போகுதே
(புதிய வார்ப்புகள்)
ஆயிரம் மலர்களே
(நிறம் மாறாத பூக்கள் )
இரு பறவைகள்
(நிறம் மாறாத பூக்கள்)
கீதா சங்கீதா
(அன்பே சங்கீதா)
மயிலே மயிலே
(கடவுள் அமைத்த மேடை)
தோட்டம் கொண்ட ராசாவே
(பகலில் ஒரு இரவு)
ஹேய் மஸ்தானா
(அழகே உன்னை ஆராதிக்கிறேன் )
என் வானிலே
(ஜானி )
மீன்கொடி தேரில்
(கரும்பு வில் )
தெய்வீக ராகம்
(உல்லாசப் பறவைகள் )
பூ மலர்ந்திட நடமிடும்
(டிக்! டிக்! டிக்! )
காதல் ஓவியம் பாடும் காவியம்
(அலைகள் ஓய்வதில்லை)
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
(அலைகள் ஓய்வதில்லை)
பனியும் நானே மலரும் நீயே
(பனிமலர்)
என் கானம் எங்கு அரங்கேறும்
(ஈர விழி காவியங்கள்)
கல்யாணம் என்னை முடிக்க
(மெட்டி)
பூத்து நிக்குது காடு,
என் கானம் எங்கு அரங்கேறும்
(எச்சில் இரவுகள்)
ஆத்தோரம் காத்தாட
(எங்கேயோ கேட்ட குரல்)
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜென்சி!.