திருக்குறளுக்கு புதிய வெளிச்சம் கொடுத்த அயோத்திதாசர்!

திருக்குறளில் நமக்குப் புதிய வெளிச்சம் கொடுத்த அயோத்திதாச பண்டிதர் ( 20.05.1845 – 05.05.1914) பிறந்த நாள் இன்று.

பிரதிகள் அழிந்து நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளை அயோத்திதாசனாரின் பாட்டனரான பட்லர் கந்தப்பனின் குடும்ப சேமிப்பு ஏடுகளில் இருந்து சென்னை மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த எல்லிஸ் துரையிடம் அயோத்திதாசனாரின் தந்தை கந்தப்பன் வழங்கினார்.

எல்லீஸ் துரை

திருக்குறள் அறத்துப்பாலின் முதல் 13 அதிகாரங்களை எல்லீஸ் துரை அச்சேற்றினார்.

அதன் பின்னர்தான் திருக்குறள் இன்றைய அச்சு வடிவுக்கு வந்தது.

எல்லீஸ் துரை நாணயம் தயாரிக்கும் தங்கசாலைக்கு பொறுப்பாக இருந்ததால் திருவள்ளுவர் உருவப்படம் பொறிக்கப்பட்ட தங்கக் காசையும் வெளியிட்டார்.

ஆனால், அது புழக்கத்துக்கு விடப்படவில்லை.

அயோத்திதாசர் மறைவதற்கு ஒரு வருடம் முன்பு எழுதத் துவங்கிய திருக்குறள் உரையானது அவரது மரணத்தால் 55 அதிகாரங்களுடன் நின்று விட்டது.

தமிழ், சமஸ்கிருதம், பாலி மொழிகளில் சித்த மருத்துவம், தத்துவம் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமை கொண்டவர் அயோத்திதாசர்.

இவரது தாத்தா நீலகிரியில் மதுரை ஆட்சியராக இருந்த ஜார்ஜ் ஹாரிங்டனிடம் வேலைபார்த்து வந்தார்.

அப்போது சமையல்காரரிடம் அடுப்பெரிக்கக் கொடுத்த ஓலைச் சுவடிகளைப் பார்த்த பட்லர் கந்தப்பன் அவற்றை எரிக்காமல் பாதுகாத்து வைத்ததில்தான் திருக்குறளும் நாலடியாரும் நமக்குக் கிடைத்தன.

படித்த தன் குடும்பத்தின் சொத்தாக இருந்த ஓலைச்சுவடிகள்தான் எல்லீஸ் துரை திருக்குறளைப் பதிப்பிக்கக் காரணமாக இருந்தன. எல்லீஸ் அதனை உடனே ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தார்.

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment