உலக உயர் ரத்த அழுத்த தினம் (மே 17) இன்று.
ஹைபர்டென்ஷன் எனப்படும் உயர் ரத்த அழுத்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே மே-17ஆம் தேதி உயர் ரத்த அழுத்த நோய் தினமாக கடைபிடிக்கின்றனர்.
இந்திய இளைஞர்களில், சராசரியாக 3 பேரில் ஒருவருக்கு ரத்த அழுத்த பாதிப்பு உள்ளது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.
மாறிவரும் வாழ்க்கைச் சூழலே இதற்கு முக்கியமான காரணம் என்றும் பணியில் ஏற்படும் மன அழுத்தம் உயர் ரத்த நோய் ஏற்பட காரணமாக உள்ளது என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
உயர் இரத்த அழுத்தம் பெரும்பாலும் ஒரு பொதுவான நிகழ்வாக ஒதுக்கித் தள்ளப்படுகிறது.
பிரச்சனை சமாளிக்க முடியாத அளவிற்கு மோசமடையும் வரை மக்கள் அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளாத ஒரு போக்கைக் கொண்டிருக்கின்றனர்.
இதில் இன்னும் வேதனையானது என்னவென்றால் பலருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதே தெரிவதில்லை என்பதுதான். பெரும்பாலும் அறிகுறிகள் இல்லை என்பதால் நோய் முற்றும் வரை நோய் இருப்பதையே பலர் கண்டுபிடிக்க தவறுகிறார்கள்
காலையில் வெறும் வயிற்றில் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அடுத்த நாள் பரிசோதனை முடிவுகளுடன் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவரையோ அல்லது இருதய நோய் சிறப்பு மருத்துவரையோ சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.
நமது உடலில் இரத்த அழுத்த அளவானது நடுநிலையான அளவில் இருக்க வேண்டும். மாறாக அதிகமாக இருந்தால் அது உயர் இரத்த அழுத்தம் என அழைக்கப்படுகிறது.
இரண்டு மதிப்புகளை கொண்டு இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளதா? என்பது கண்டறியப்படுகிறது. உயர் ரத்த அழுத்தமானது உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடியது.
அவை சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் ஆகும். பெரியவர்களில் சிஸ்டாலிக் மதிப்பு 140 மி.மீ.ஹெச்.ஜி மற்றும் டயஸ்டாலிக் 90 மி.மீ.ஹெச்.ஜி அளவிற்கு குறைவாக இருந்தால் அவர்கள் சரியான இரத்த அழுத்தத்தில் இருக்கின்றனர் என பொருளாகும்.
இயற்கையாகவே உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான வழிமுறை குறித்து பார்க்கலாம்.
- உடல் எடையைக் குறைக்க வேண்டும்.
- தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
- உப்பு உட்கொள்ளும் அளவைக் குறைக்கலாம்.
- புகைப்பிடித்தலை நிறுத்தவும்.
- மது அருந்துவதை தவிர்க்கவும்.
- மன அழுத்தத்தைக் குறைக்க முயற்சிக்கவும்.
- காஃபியின் உட்கொள்ளலை கட்டுப்படுத்தவும்.
- உங்கள் உடலில் இரத்த அழுத்த அளவை கண்காணிக்கவும்.
இதேபோல் புரோ பயாடிக்குகள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்யக் கூடியவை.
எனவே இரத்த அழுத்த அளவை ஆரோக்கியமாக பராமரிக்க உங்கள் உணவில் ஒரு பகுதியாக புரோ பயாடிக்குகள் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
மேலே கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் எளிதாக உயர் இரத்த அழுத்தத்தை நம்மால் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.