தாஜ்மகால் அறைகளில் ரகசியம் எதுவும் இல்லை!

– புகைப்படத்தை வெளியிட்டது இந்திய தொல்லியல் துறை

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்ட பாஜக ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங், தாஜ்மகால் வளாகத்தில் மூடப்பட்டு கிடக்கும் 20 அறைகளைத் திறக்க உத்தரவிடக்கோரி கடந்த 4-ம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்துக் கடவுள்களின் சிலை இருக்க வாய்ப்புள்ளதால் அந்த அறைகளைத் திறந்து சோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு கடந்த 12-ம் தேதி நீதிபதிகள் டி.கே. உபாத்யாய் மற்றும் சுபாஷ் வித்யார்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில், இந்திய தொல்லியல் துறை (ASI- Archaeological Survey of India) தனது பருவ இதழில் தாஜ்மகால் அறைகளின் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

அந்த அறைகளில் ரகசியம் எதுவும் இல்லை என்று தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பழுதடைந்த நிலையில் உள்ள அந்த அறைகளைp பராமரிக்கும் பணி நடைபெறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments (0)
Add Comment