நெஞ்சுக்கு நீதி படக்குழுவினரைப் பாராட்டிய முதல்வர்!

ஜீ ஸ்டூடியோஸ் (Zee Studios) – போனி கபூர் அவர்களின் பே வியூ பிராஜெக்ட் (Bayview Projects) மற்றும்  ரோமியோ பிக்சர்ஸ் (ROMEO PICTURES) ராகுல் இணைந்து தயாரிக்கும் “நெஞ்சுக்கு நீதி” படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இதனிடையே, நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் “நெஞ்சுக்கு நீதி” திரைபடத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் பார்த்தார்.

படத்தை பார்த்த பின் “நெஞ்சுக்கு நீதி” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் என அனைத்து படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மே மாதம் 20 அன்று வெளியாகவுள்ள “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

Comments (0)
Add Comment